தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கோரோனா? பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
- IndiaGlitz, [Thursday,March 11 2021]
தமிழகத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி துவங்கிய லாக்டவுன் கிட்டத்தட்ட 8 மாதங்கள் இயல்பு வாழ்க்கையையே முடக்கிப் போட்டது. பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீண்டும் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகமே பரபரப்பாக மாறி இருக்கும் வேளையில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டு உள்ள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் 51.81% கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து உள்ளதாகக் குறிப்பிட்டு இருக்கிறது. எனவே தமிழக மக்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்து நோய் பாதிப்பை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கூட்ட நெரிசல்களை தவிர்த்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் நோய் பாதிப்புள்ள மற்றும் வயதானவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறும் தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.
— TN SDMA (@tnsdma) March 11, 2021