தமிழக அரசின் உத்தரவால் 'பேட்ட', விஸ்வாசம்' படங்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

  • IndiaGlitz, [Tuesday,January 08 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் ஜனவரி 10ஆம் தேதியை அடுத்து 11ஆம் தேதி மற்றும் 14ஆம் தேதி ஆகிய இரு நாட்களும் வேலை நாட்களாகவும், அதன் பின் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களும் விடுமுறை நாட்களாகவும் இருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ஒன்றில் ஜனவரி 14ஆம் தேதி விடுமுறை தினம் என்றும், அதற்கு பதிலாக பிப்ரவரி 9ஆம் தேதி வேலை நாள் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஜனவரி 12 முதல் 17 வரை தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை நாளாகிறது. இந்த ஆறு நாட்களிலும் ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியும் கிடைத்துள்ளதால் 'பேட்ட', 'விஸ்வாசம்' ஆகிய பொங்கல் படங்களுக்கு நீண்ட விடுமுறை இடைவெளி அதிர்ஷ்டவசமாக கிடைத்துள்ளது. இதனால் இரு படங்களின் ஓப்பனிங் வசூல் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

'இந்தியன் 2' லொகேஷன்ஸ்: ஆச்சரியமான புதிய தகவல்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஷங்கர் பிசியாக உள்ளார்.

சென்னையில் பிரபல இயக்குனரின் மகன் சென்ற கார் விபத்து

திரையுலக நட்சத்திரங்கள் அவ்வப்போது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றும் ஒரு பிரபல இயக்குனரின் மகன் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

'என் பேட்டையில எவனும் விஸ்வாசமா இல்லை': சாருஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

'96' பட நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் சென்ற ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று மட்டுமின்றி ரசிகர்களின் மனதில் நீண்டகாலம் நிற்கும் ஒரு படமாகவும் அமைந்துள்ளது.

சிம்பு தொடரந்த வழக்கில் விஷாலுக்கு நோட்டீஸ்

சிம்பு நடிப்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அடங்காதவன் அசாரதவன்' என்ற படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்து படுதோல்வி அடைந்தது.