இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் தமிழகம்!!! 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து சாதனை!!!
- IndiaGlitz, [Friday,August 07 2020]
இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் மாநிலமாக தமிழக விளங்குகிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 வருடங்களாக இந்திய அளவில் தமிழகம் முன்னேறிய பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருந்தது என சுட்டிக் காட்டப்பட்ட நிலையில் தற்போது 3 ஆண்டாகத் தொடர்ந்து தமிழகம் முன்னிலை வகிப்பதை புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுயிருக்கின்றன. அதுவும் 2019-20 ஆண்டின் சராசரி விகிதம் மற்ற ஆண்டுகளைவிட அதிகமாக இருப்பதாகவும் மூத்த அதிகாரி டி. ராமகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடு செய்யப்பட்டு அதன் புள்ளிவிரவங்கள் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அதில் அகில இந்திய சாராசரி எண்ணிக்கை 4.2% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தின் மொத்த சராசரி எண்ணிக்கை 8.3% ஆக பதிவாகியிருக்கிறது. இந்த எண்ணிக்கை இந்திய அளவோடு ஒப்பிடும்போது இரண்டு மடங்காக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனிநபர் வருமானத்தை பொறுத்தவரை (நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது) 2019-2020 ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் எண்ணிக்கை 1,53,853 ஆகும். இது அகில இந்திய அளவில் 6 ஆவது இடத்திலும் 2018-19 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,42,941 என இந்திய அளவில் 12 ஆவது இடத்திலும் இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பை பொறுத்தவரை மாநிலத்தின் தரவரிசை மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக இரண்வடாது இடத்தில் இருந்த நிலையில் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் பல நடவடிக்கைகளின் காரணமாக மாநிலத்தின் பொருளாதாரம் மீட்கப்படுவதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது என்பதையும் மூத்த அதிகாரி டி. ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். 2019-20 நிதியாண்டின் முடிவில் கொரோனா பெருந்தொற்று பரவியதால் இந்த செயல்முறையை தற்போது சீர்குலைத்து விட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2019-20 மதிப்பீடுகளின்படி வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், சுரங்க மற்றும் குவாரி ஆகியவற்றை உள்ளடக்கிய முதன்மைத் துறையின் வளர்ச்சி விகிதம் 6.8% ஆகவும், ரியல் எஸ்டேட் உள்ளடக்கிய சேவைகளுக்கு இது 6.63% ஆகவும் இருந்தது.
முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் சேவைத் துறைகளுக்கான முந்தைய ஆண்டின் புள்ளிவிவரங்கள் முறையே 8.49%, 6.49% மற்றும் 7.83% ஆகும். முதன்மை துறையைத் தவிர மற்ற இரண்டு துறைகளும் முந்தைய ஆண்டை விட இந்த முறை சிறப்பாக செயல்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார். முதன்மைத் துறையில் கூட விவசாயத்தின் கூறு 5.8% விகிதத்தில் இருந்த நிலையில் இது 2018-19 ஆம் ஆண்டில் 7.43% ஆக உயர்ந்துள்ளது.
கால்நடைகளின் பிரிவு கடந்த ஆண்டு 11.13% உடன் மிகச் சிறப்பாக செயல்பட்டது. அதே நேரத்தில் இது 6.64% மட்டுமே தற்போது வளர்ச்சியைக் கண்டுள்ளது. சேவைத் துறையைப் பொறுத்தவரை நிதி சேவைகள், 11.71% வீதத்தை பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில் 2018-19 ஆண்டிற்கான இவற்றின் எண்ணிக்கை வெறும் 2.21% மட்டுமே. அதேபோல், ரியல் எஸ்டேட் பிரிவு முந்தைய ஆண்டின் 6.69% உடன் ஒப்பிடும்போது 7.29% உடன் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இவ்வறாக மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் இருந்து தமிழகம் முதன்மை பெற்றிருக்கிறது என டி.ராமகிருஷ்ணன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.