உட்கட்சி விவகாரங்களில் எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் எங்களை யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது என்றும் கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக கூட்டணியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி என்றைக்கும் தலையிட்டது கிடையாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு கருத்து வெளியிட்டு உள்ளார்.
தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தற்போது அதிமுக ஈடுபட்டு வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றும் இதில் நிர்பந்தம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த தொகுதி பங்கீட்டு விஷயத்தை ஒட்டி சசிகலா மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.
ஆனால் மீண்டும் அதிமுகவில் சசிகலா இணைத்துக் கொள்ளப்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லவே இல்லை. இதுவே உறுதியான நிலை என்றும் அதிமுக கூட்டணி வரப்போகும் தேர்தலில் பெரும்பான்மை இடத்தில் வெற்றிபெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com