பிதாமகனை மிஞ்சிய சேவை… இடுகாட்டில் கெத்துக்காட்டும் மூதாட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவா ஊர் கிராமங்களில் உள்ள இடுகாடுகளில் வெட்டியான் இருப்பதைப் பார்த்து இருப்போம். “பிதாமகன்“ படத்தில் நடிகர் சூர்யா பிணங்களை எரிப்பது, புதைப்பது, இறுதி காரியங்களைச் செய்வது என வெட்டியான் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து இருப்பார். இப்படியொரு வேலையை அதுவும் மூதாட்டி ஒருவர் செய்து வருகிறார் என்பதுதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் கிராப்பட்டி எனும் ஊரில் உள்ள இடுகாட்டில் மாரியாயி எனும் மூதாட்டி கடந்த 17 வருடங்களாக வெட்டியான் வேலை பார்த்து வருவதாகக் கூறியுள்ளார். மேலும் தனது கணவர் இந்தத் தொழிலை செய்து வந்ததாகவும் அவருடைய இறப்புக்கு பிறகு தனக்கு இருந்த ஒரே மகனும் இந்தத் தொழிலை கைவிட்டு விட்டதால் தானே இந்த வேலையைத் தொடர்ந்து செய்து வருவதாகக் கூறுகிறார்.
கிராமங்களில் பெண்களை இடுகாடுகளுக்கு அனுப்பும் வழக்கம் இருப்பதில்லை. அது சொந்த கணவனின் இறப்பாக இருந்தாலும் சரி பெண்களை ஒதுக்கியே வருகின்றனர். இப்படி இருக்கும்போது மாரியாயி கடந்த 17 வருடங்களாக வெட்டியான் செய்யும் அதே வேலையைத் தொடர்ந்து செய்து வருவதாகக் கூறி இருக்கிறார். பிணங்களுக்கு குழி வெட்டுவதைத் தவிர்த்து மற்றபடி இறுதி காரியங்களை செய்வது, பிணங்களை எரிப்பது என அச்சமின்றி செய்து வருகிறார்.
மேலும் கொரோனா நேரத்தில் ஒவ்வொரு நாளும் 20 க்கும் மேற்பட்ட பிணங்களை தான் எரித்ததாக மாரியாயி கூறியுள்ளார். இதனால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்ட அவர் தற்போது தனது வெட்டியான் வேலையைத் தொடர்ந்து இருக்கிறார். இதனால் வேலையை விடும்படி சொந்தங்களே எச்சரித்த பின்பும் தனது இறுதி மூச்சு வரை என்னுடைய சேவை தொடரும் என கூறியுள்ளார் மாரியாயி. மனிதம் போற்றும் சேவை தொடரட்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout