பூமியை நோக்கி 38 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் நெருங்கும் ராட்சதகல்!!! பாதிப்பு இருக்குமா???

  • IndiaGlitz, [Saturday,September 12 2020]

 

பூமியை நோக்கி 38,624 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு ராட்சத கல் வந்து கொண்டிருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. சூரிய மண்டலத்தில் நிகழும் அனைத்து மாற்றங்களையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து பூமிக்கு வரும் பாதிப்புகளை குறித்து எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பூமியை நோக்கி ஒரு சிறிய கோள் ஒன்று அதிக வேகத்தில் வருவதாகக் குறிப்பிட்டு உள்ளனர்.

அளவில் பெரிதாக இருந்தாலும் இந்த சிறிய கோள் பூமியை நெருங்கும்போது பெரிய ஆபத்து எதுவும் இருக்காது என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர். இந்த சிறிய கோளானது 2 கால்பந்து மைதானத்தை போன்று இருக்கும் என்றும் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி பூமிக்கு அருகில் வந்து செல்லும் என்றும் குறிப்பிட்டு உள்ளனர். மேலும் 38,624 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்தாலும் பூமியை கடந்து செல்லும்போது ஆபத்து இருக்காது என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, சிறுகோள் அளவில் பெரியதுதான். ஆனால் இது பூமியின் மீது மோத வாய்ப்பில்லை. அதாவது விண்கல்லின் அளவு மற்றும் பூமிக்கு அருகாமையில் செல்லும் தூரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதன் அபாயத்தை நாசா கணக்கிடுகிறது. அதன்படி விண்கல் 2020 கியூஎல் 2 நாசாவால் அபாயகரமானதாக கருதப்படுகிறது. இருப்பினும் இது பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் ஏதும் இல்லை என்றே தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியைக் கடந்து சில நேரங்களில் மோதுகின்றன. ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்றும் நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். கி.என்.இ.ஓ.எஸ் அறிக்கையின்படி 0.05 வானியல் அலகுகளுக்குள் (4.6 மில்லியன் மைல்கள்) வந்து 140 மீட்டர் (460 அடி) க்கும் அதிகமான விட்டம் கொண்ட விண்வெளி பொருள்கள் அபாயகரமானவை என்று பெயரிடப்பட்டுள்ளன.

இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் 2020 கியூஎல் 2 அபாயம் என கருதப்படுகிறது. இருப்பினும் அந்த விண்கல் பயணித்து வரும் பாதையை கருத்தில் கொண்டு இது பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர். மேலும் பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்ல இருப்பதாகவும் அடுத்த 100 ஆண்டுகளில் விண்கல் மோதும் அச்சுறுத்தல் இல்லை என்றும் சமீபத்தில் நாசா தெரிவித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நீட் என்பது தேர்வுமல்ல; தற்கொலை என்பது தீர்வுமல்ல: வைரமுத்து

நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதன் பரபரப்பு நீங்காத நிலையில்

படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம்: மதுரை மாணவி தற்கொலை குறித்து பிரபல இயக்குனர்!

மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்பவர் நீட் தேர்வு பயம் காரணமாக இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்ட தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்போன் அழைப்பை எடுக்காத காதலி: சோகத்தில் 3வது மாடியில் இருந்து குதித்த சென்னை வாலிபர்!

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் திடீரென அந்தப் பெண் காதலை முறித்துக் கொண்டதால்

கொரோனாவை குணமாக்கும் கருப்புத்தங்கம்: வைரமுத்து!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது நேற்றும் கூட தமிழகத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும்

போதைப்பொருள் வழக்கு: ரியாவின் வாக்குமூலத்தில் சிக்கிய சூர்யா, கார்த்தி, தனுஷ் பட நடிகைகள்?

கன்னட திரையுலகில் மட்டுமன்றி பாலிவுட் திரை உலகிலும் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி