எலும்புக் கூடுகளால் நிரம்பி வழியும் ஏரி!!! திகிலூட்டும் மர்மப் பிண்ணணி!!!

  • IndiaGlitz, [Friday,August 21 2020]

 

இரண்டாம் உலகப்போருக்குபின் இமயமலைப் பள்ளத்தாக்கில் ஒரு மர்ம ஏரி இருப்பதை ஹரிகிருண மதுவால் என்பவர் கண்டுபிடித்து இருக்கிறார். 4800 மீட்டர் ஆழமான இந்த ஏரி முழுவதும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு பார்ப்பதற்கு ரம்மியமான உணர்வைத் தருகிறது. ஆனால் கோடை காலத்தில் பனிஉருகி விலகும்போதுதான் அதன் உண்மையான கோர முகமும் வெளிச்சத்திற்கு வருகிறது. அத்தனை ஆழமான ஏரி முழுவதும் வெறும் எலும்புக் கூடுகளாக நிரம்பி வழிய எலும்புக்கூடுகள் வாயைப்பிளந்து மேலும் பயத்தை ஏற்படுத்துகின்றன.

எலும்புக் கூடுகளால் நிரம்பி வழியும் இந்த ஏரியை அப்பகுதி மக்கள் ரூப்குகித் ஏரி (எலும்புக்கூடு) என்றே அழைக்கின்றனர். இவ்வளவு எலும்புக்கூடு எங்கிருந்து அந்தப் பள்ளத்தாக்கிற்கு வந்திருக்கும், என்ன நடந்திருக்கும் என்பதைக் குறித்து வருடக்கணக்காக வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் அப்பகுதியில் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இந்தியா இருந்தபோது அவர்களை எதிர்த்து எல்லைத் தாண்டிய ஜப்பானியர்கள்தான் இந்த ஏரியில் எலும்புக் கூடுகளாக மிதக்கிறார்கள் என்றொரு வலுவான காரணமும் சொல்லப்படுகிறது.

அதைத்தவிர இரண்டாம் உலகப்போரை முடித்துக் கொண்டு மலை வழியாக வந்த இந்திய இராணுவ வீரர்கள் பனிப்புயலில் சிக்கி உயிரை விட்டனர். அவர்களின் எலும்புக் கூடுகள்தான் இந்த ஏரியில் மிதக்கிறது என மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. இமயமலை பள்ளத்தாகுகளில் வழங்கப்படும் நாட்டுப்புறக் கதைகள் இதுகுறித்து வேறு ஒரு காரணத்தையும் கூறுகின்றன. அதாவது இமயமலை பள்ளத்தாக்கில் நந்தா தேவி என்னும் பெண் தெய்வம் ஒன்று வாழுகிறது. மலையைத் தாண்டி போகக்கூடாது என அத்தெய்வம் மக்களை தொடர்ந்து எச்சரிக்கை செய்யும். நந்தா தேவியின் பேச்சைக் கேட்காமல் சென்றவர்கள் இப்படி ஏரிகளில் மிதக்கிறார்கள் எனவும் அந்த நாட்டுப்புறக் கதை குறிப்பிடுகிறது.

ஆனால் மிதக்கும் எலும்புக்கூடுகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த எலும்புக்கூடுகள் அனைத்து ஒரே காலக்கட்டத்தை சேர்ந்தது இல்லை. வெவ்வேறு காலக்கட்டத்தில் வெற்வேறு பகுதிகளில் இருந்து மக்களாக இருக்கிறார்கள். அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருக்கின்றனர். அவர்களின் எலும்புக் கூடுகள் பெரும்பாலும் சேதமடையாமல் இருக்கிறது. அதனால் போர் போன்ற தருணங்களில் இவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இங்குள்ள ஆண்களின் எலும்புக்கூடுகள் பெரும்பாலும் படுகாயங்களுடன் காட்சித் தருகிறது. இவர்கள் யார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறித்து தீவிரமான ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

சமீபத்தில் அப்பகுதியில் உள்ள 38 எலும்புக் கூடுகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஆய்வாளர்கள் 3 வெவ்வேறு பிரதேசங்களை சார்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 23 எலும்புக் கூடுகள் தற்போதுள்ள இந்தியப் பகுதியைச் சார்ந்தவர்கள் என்றும் 1 எலும்புக்கூடு தென்கிழக்கு ஆசியப் பகுதியைச் சார்ந்தது என்றும் 3 எலும்புக்கூடு மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சார்ந்தது என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பனிக்காலத்தில் ரம்பியமான ஏரி, கோடையில் நிரம்பி வழியும் எலம்புக்கூடு, அதுவும் வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்தவை எனப்பல திகிலூட்டும் மர்மமாகவே இந்த ஏரி இன்னும் காட்சியளிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கோவில் வளாகத்தில் கொன்று புதைக்கப்பட்ட மளிகைக்கடை ஊழியர்: கள்ளக்காதலி உள்பட மூவர் கைது!

கோவில் வளாகத்தில் மளிகை கடை ஊழியர் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை: சென்னையில் பரபரப்பு 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்க போலீசார் சென்றபோது துரைமுத்து வீசிய வெடிகுண்டால் சுப்பிரமணியம் என்ற போலீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செல்ல மகளின் பெயரை அறிவித்த நடிகர் நகுல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' 'கந்த கோட்டை

பார்வையற்ற மாற்றுத்திறனாளி ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்பிபி: வைரலாகும் வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

அட லூசுங்களா! நித்தியானந்தாவின் வேற லெவல் காமெடி: வைரலாகும் வீடியோ

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இந்திய அரசால் தேடப்பட்டு கொண்டிருக்கும் நித்தியானந்தா, அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்