பழைய தேர்வு முறையே தொடரும்.. 5ம் மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து..! தமிழக அரசு அறிவிப்பு.
Send us your feedback to audioarticles@vaarta.com
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவித்த உடனே அதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக ஆளும் அதிமுக அரசுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில் தேர்வை ரத்து செய்வதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மாணவர்களின், பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இந்த புதிய பொதுத்தேர்வு கொடுத்த அழுத்தத்தின் காரணாமாக மாணவர்களும் பெற்றோர்களும் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். அதற்கு ஒரு தீர்வாக இந்த அறிவிப்பை மக்கள் கருதுகின்றனர். ஆனால் இது இந்த பொதுத்தேர்வு ரத்து இந்த வருடத்திற்கு மட்டுமா இல்லை முழுவதுமாக எந்த ஆண்டும் இந்த தேர்வு நடத்தப்படாதா என்பது குறித்த விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout