விவசாயிகளுக்கு 24 மணி நேர இலவச மின்சாரம்: வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர்
- IndiaGlitz, [Friday,December 29 2017]
பாரத நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்காத நிலையில் விவசாயிகளுக்கு 24 மணி நேர இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
இந்த நடைமுறை வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசாக இது கருதப்படுகிறது
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது 'விவசாயத்திற்கு 24 மணி நேர இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பால் தெலுங்கானா முழுவதும் சுமார் 23 லட்சம் பம்புசெட்டுக்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் இலவச மின்சாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இதற்காக மாநில அரசுக்கு வருடம் ஒன்றுக்கு ரூ.12610 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றாலும் விவசாயம் செழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.