விவசாயிகளுக்கு 24 மணி நேர இலவச மின்சாரம்: வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர்

  • IndiaGlitz, [Friday,December 29 2017]

பாரத நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்காத நிலையில் விவசாயிகளுக்கு 24 மணி நேர இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறை வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசாக இது கருதப்படுகிறது

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது 'விவசாயத்திற்கு 24 மணி நேர இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பால் தெலுங்கானா முழுவதும் சுமார் 23 லட்சம் பம்புசெட்டுக்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் இலவச மின்சாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்காக மாநில அரசுக்கு வருடம் ஒன்றுக்கு ரூ.12610 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றாலும் விவசாயம் செழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யை பெரிய நடிகராக்கியது நாங்கள் தான்: அபிராமி ராமநாதன்

மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்திலும், ரவி மரியா, கலக்க போகுது யாரு புகழ் குரேஷி உள்பட பலர் நடித்த 'ஆறாம் திணண' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

அரியலூர் அனிதா சகோதரருக்கு அரசுப்பணி: முதல்வர் வழங்கினார்.

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வு காரணமாக மெடிக்கல் சீட் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்

சி.வி.குமாரின் அடுத்த படத்திற்கு ஹாலிவுட் பட டைட்டில்

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்து இயக்கிய 'மாயவன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அவருடைய அடுத்த தயாரிப்பு படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

யார் யார் காலில் விழவேண்டும்: ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாம் கட்டமாக கடந்த 26ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மூன்றாம் நாளாக மதுரை, நாமக்கல், விருதுநகர் மற்றும் சேலம் பகுதி ரசிகர்களை சந்தித்த

விஜய், சூர்யாவுக்கு நேர்மாறானவர் விஷால்: சமந்தா

நான் விஜய், சூர்யாவுடன் நடிக்கும்போது அவர்களிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வேன். ஆனால் விஷாலிடம் அதற்கு நேர்மாறாக ஜாலியாக நடித்தேன்.