சென்னையை நோக்கி வரும் சிவப்பு தக்காளிகள்: கனமழைக்கு வாய்ப்பு என வெதர்மேன் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வறட்சி தாண்டவமாகி தண்ணீர் கஷ்டம் ஏற்பட்ட நிலையில் வருணபகவான் கடந்த சில நாட்களாக கருணை காட்டியதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பாவிட்டாலும், நிலத்தடி நீர் ஓரளவுக்கு அதிகரித்துள்ளதால் தண்ணீர் கஷ்டம் ஓரளவுக்கு குறைந்துள்ளது. குறிப்பாக அதிகபட்ச வெயில் அடிக்கும் வேலூரில் கனமழை பெய்துள்ளதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்., சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை சுற்றி மெதுவாக வரும் சிவப்பு தக்காளிகள் காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. இந்த 3 மாவட்டங்களை நோக்கி சிவப்பு தக்காளி வருவதற்கு கொஞ்ச நேரம் எடுக்கும்.
ஆனால் இந்த மூன்று மாவட்டங்களை நோக்கி சிவப்பு தக்காளி வந்துவிட்டால், குறிப்பாக சென்னை எல்லையை அடைந்தால் மேகக் கூட்டங்கள் மிகவும் தீவிரமடையும். எனவே இந்த மழை நீரை மழை நீர் சேகரிப்பு திட்டத்தை பயன்படுத்தி சேமிக்க வேண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவுறுத்தியுள்ளார். ரேடார் மூலம் தோன்று சிவப்பு நிற மேகக்கூட்டங்களையே தமிழ்நாடு வெதர்மேன் சிவப்பு தக்காளிகள் என்று கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த மழையை சென்னை உள்பட மூன்று மாவட்ட மக்கள் மழைநீர் சேகரிப்பின் மூலம் பயன்படுத்தி கொண்டால் இன்னும் சில மாதங்களுக்கு தண்ணீர்ப்பிரச்சனை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments