சத்தமில்லாமல் ஒரு சரித்திர சாதனை… அரசு பள்ளிகளில் குவியும் அட்மிஷன்கள்!!! தமிழக அரசு அதிரடி!!!

  • IndiaGlitz, [Monday,September 07 2020]

 

கொரோனா காலத்தில் பள்ளி, கல்வி குறித்த செயல்பாடுகளில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சத்தமில்லாமல் அரசு பள்ளிகளின் சேர்க்கை விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்து இருப்பதாகத் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்து 459 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பித்து வருகிறது தமிழக அரசு. இருந்தாலும் தனியார் பள்ளிகளையே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா காலத்தில் தமிழகப் பள்ளிகளின் சேர்க்கை விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்து இருக்கிறது. இதற்கு கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கமே காரணம் எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அரசு பள்ளிகளில் தமிழக அரசு எற்படுத்தி வரும் புதுமையான செயல் திட்டங்களே இதற்கு முக்கியக் காரணமாக இருந்து வருகிறது. அரசு பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செய்துவருவதோடு நவீனக் கல்விமுறைக்கு ஏற்ப அரசு கல்வி திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய முன்னேற்றமான ஏற்பாடுகளால் இதுவரை தமிழக பள்ளிகளில் 10 லட்சத்துக்கும் அதிகமான அட்மிஷன்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

தமிழகப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் கட்டமைப்பு வசதிகளில் எப்போதுமே தமிழக அரசு அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. அதைத்தவிர நவீனக் கல்விச்சூழலுக்கு ஏற்ப கணினி வழி கல்வி, ஸ்மார்ட் கிளாஸ் எனப் பள்ளிக் கல்வி துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது பெற்றோர்களின் கவனம் அரசு பள்ளிகளின்மீது மாறியிருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் முட்டையுடன் கூடிய சத்துணவு, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், காலணிகள், சைக்கிள், லேப்டாப் என மொத்தம் 14 வகையான நலத்திட்ட உதவிகளை எவ்வித குளறுபடிகளும் இல்லாமல் தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் அட்மிஷன்கள் அதிகமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசு பள்ளிகளுக்கு வழங்கும் நலத்திட்டப் பொருட்கள் அனைத்தும் மிகவும் உயர்வான தரத்துடன் இருப்பதும் கூடுதல் சிறப்பாகப் பார்க்கப் படுகிறது.

தமிழகப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய விஷயத்தில் எவ்விதக் குறைபாடுகள் இல்லாமல் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் மற்ற மாநிலங்களில் ஆசிரியர்களுக்கான ஊதியங்கள் 30-50% குறைக்கப் பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தமிழகத்தில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் எந்தவித குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை. இந்தக் காரணத்தினால் கூடுதல் உற்சாகத்துடன் பணியாற்றத் தொடங்கி இருப்பதாகத் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களும் தற்போது மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நம்ம ஊர்லையும் கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா! பகீர் தகவல்!!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு  மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது

ஒரு ஈயை கொல்லப்போய் வீட்டையே கொளுத்திய தாத்தா!!! வைரல் சம்பவம்!!!

பிரான்ஸ் நாட்டில் முதியவர் ஒருவர் ஈயைக் கொல்லுவதற்கு முயற்சி செய்து வீட்டையே கொளுத்திய சம்பவம் கடும் வைரலாகி இருக்கிறது.

தல தோனி பாணியில் ரிட்டயர்மெண்டை அறிவித்த கவின்! வைரலாகும் டுவீட்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் 'தல' என்று அன்புடன் அழைக்கப்படும் தோனி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

பிக்பாஸ் 4வது சீசனிலும் சாண்டி: வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் பிக்பாஸ் தமிழ் 4வது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜூவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த விஷ்ணுவிஷால்: விரைவில் திருமணமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த 2010ஆம் ஆண்டு ரஜினி நடராஜ் என்பவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக