கத்திக்கு 12A கொடுத்த பிரிட்டன் சென்சார்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்யின் கத்தி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் கத்தி திரைப்படம் குறித்து தினமும் பல பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றது. தற்போது வந்துள்ள செய்தியின்படி விஜய்யின் 'கத்தி' பிரிட்டனில் மொத்தம் 70 தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது என்பதுதான். இதுவரை எந்த ஒரு தமிழ்ப்படமும் பிரிட்டனில் இவ்வளவு அதிகமான தியேட்டர்களில் வெளியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் எந்திரன் திரைப்படம் பிரிட்டனில் 30 தியேட்டர்களில்தான் ரிலீஸ் ஆனது . ஆனால் எந்திரன் சாதனையை வேலாயுதம் ஏற்கனவே முறியடித்துவிட்டது. தற்போது வேலாயுதம் சாதனையை கத்தி முறியடித்துள்ளது.
மேலும் பிரிட்டன் சென்சார் போர்டு கத்தி திரைப்படத்திற்கு 12A சர்டிபிகேட் கொடுத்துள்ளது. இதன்படி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனியாக வந்து கத்தி திரைப்படத்தை பார்க்க முடியாது. 12 வயதுக்கு மேற்பட்ட நபர் ஒருவருடன் சேர்ந்து வந்து படத்தை பார்க்க வேண்டும். பொதுவாக பிரிட்டனில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் 12A சர்டிபிகேட்தான் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவர்களின் கார்ட்டூன் படங்கள் படங்கள் மட்டும் 12 என்ற சர்டிபிகேட் கொடுக்கப்படும். 12 சர்டிபிகேட் வழங்கப்பட்ட திரைப்படங்களை 12 வயதுக்கு குறைவானவர்கள் தனியாக பார்க்கலாம்.
அனிருத் இசையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கத்தி' படத்திற்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com