Amitabh ,SRK to celebrate 100 years of Indian cinema in Chennai (தமிழ்)
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் அமிதாப - ஷாரூக்கான் இருவரும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை பிலிம் சேம்பர் சென்னையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதிவரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த விழாவின் தொடக்க நாள் அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஷாரூக்கான் ஆகியோரும் அதே தினத்தில் விழாவில் பங்கேற்கிறார்கள்.
முதல் நாள் விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் சிறந்த 50 கலைஞர்களின் உருவபடங்கள் அடங்கிய தபால்தலை வெளியிடப்படுகிறது.
இரண்டாவது நாள் சிறப்பு விருந்தினர்களாக ஆந்திர முதல்வரும், கர்நாடக முதல்வரையும் அழைத்திருக்கிறாகள்.
நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடக்கும் இந்த விழாவின் கடை நாள் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் உட்பட முக்கிய திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
குறிப்பாக இந்திய சினிமாவின் நூற்றாண்டை நினைவுபடுத்தும் விதமாக இசைஞானி இளையராஜா இசையில் ஒரு பாடலும், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு சிறப்பு பாடலும
Follow us on Google News and stay updated with the latest!
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com