வட இந்தியாவில் மகளுடன் தாலாட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் அஜீத் 55 திரைப்படத்திற்கு மூன்று பாடல்களை கம்போஸ் செய்து இயக்குனரிடம் அளித்துவிட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இன்று தெரிவித்துள்ளார். இதில் தாலாட்டு என்று தொடங்கும் பாடலை கேட்டு அஜீத் மிகவும் பாராட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அஜீத் தனது மகளாக நடிக்கும் அனிகாவுடன் இந்த தாலாடு பாடலை வட இந்தியாவில் அவர் பாடுவது போன்ற படப்பிடிப்பு நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சிக்கிம், ஜோத்பூர், ஜெய்ப்பூர், சண்டிகார் மற்றும் டெல்லி போன்ற இடங்களில் இந்த பாடலின் படப்பிடிப்பு பத்து நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்த மூன்று பாடல்களை தவிர மேலும் இரண்டு பாடல்களை அஜீத்55 படத்திற்காக கம்போஸ் செய்ய உள்ளதாக ஹாரீஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்த பிரமாண்ட படத்திற்கு டான் மெக்கார்தார் என்பவர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் ஏற்கனவே சயீப் அலிகான் நடித்த "கோ கோவா கோன்:" என்ற பாலிவுட் திரைப்படம் ஒன்றுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow us on Google News and stay updated with the latest!
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com