அதிமுக ஆட்சியில் தான் தமிழகமே, அமைதிப்பூங்காவாக உள்ளது...! முதல்வர் சென்னையில் பிரச்சாரம்...!
- IndiaGlitz, [Monday,March 29 2021]
தமிழகம் அமைதிப்பூங்காவாகவும், சென்னை தான் மகளிருக்கு பாதுகாப்பான நகரமாக இருப்பதாகவும் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரம் செய்தார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் இச்சுழலில், இரண்டாவது நாளாக சென்னையில் முதல்வர் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
• மயிலாப்பூரில், மாங்கொல்லை பகுதியில் பிரச்சாரம் செய்த முதல்வர், தமிழகம் இதுபோன்ற அமைதிப்பூங்காவாக இருக்க அதிமுக-வை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றும், ஆட்சிக்காலத்தில் கட்சி செய்த நன்மையான திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டுக் காட்டினார்.
• மேலும் தியாகராயநகர் வேட்பாளர் சத்யநாராயணனுக்கு ஆதரவாக, அசோக் நகர் அம்பேத்கர் சிலை அருகே வாக்குகள் சேகரித்தார் முதல்வர். அப்போது அவர் கூறியதாவது, சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக விளங்கி வருகிறது என்று பிரச்சாரம் செய்தார்.
• பின்பு அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் கோகுல இந்திராவுக்கு வாக்குகள் சேகரிக்க சி.எம்.டி காலனியில் பரப்புரை செய்த அவர், சென்னையில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு 2.5 லட்சம் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.
• பாமக வேட்பாளர் கசாலிக்கு ஆதரவாக, திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் மற்றும் பாஜக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கும் குஷ்பூ-வுக்கு ஆதரவாக வள்ளுவர் கோட்டத்திலும் வாக்குகளை சேமித்தார்..
• மேலும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து, சைதாப்பேட்டை அரங்கநாதன் தெரு சுரங்கப்பாதைக்கு அருகில் பிரச்சாரம் செய்தார்.
• அதேபோல் விருகம்பாக்கத்தில் களமிறங்கும் விருகை ரவிக்கு ஆதரவாக, எம்ஜிஆர் நகரில் பரப்புரை செய்தார்.
• சென்னையில் உள்ள பிற நகரங்களான மதுரவாயல் தொகுதியில் பெஞ்சமினை ஆதரித்தும், பூந்தமல்லி தொகுதியில் ராஜமன்னாரை ஆதரித்தும் முகப்பேர் மேற்குத்தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
• இதேபோல் அம்பத்தூர் தொகுதியில் களமிறங்கும், அதிமுக வேட்பாளர் அலெக்சாண்டருக்கு ஆதரவாக இளங்கோ நகர் ஆபிசர் காலனியருகில் மக்களிடம் பேசி வாக்குகள் சேகரித்தார் முதல்வர் பழனிச்சாமி.