கொரோனாவை வென்றெடுத்த தமிழகம்… அதிரடி நடிவடிக்கைக்கு கிடைத்த பரிசு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தாலும் தமிழகத்தில் கடந்த சில தினங்களாகக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. கொரோனா தடுப்பு செயல்பாடுகளில் தமிழக அரசு காட்டிவரும் அதிரடி நடவடிக்கையால் இது சாத்தியமானதாக மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஜுலை மாதத்தில் 6 ஆயிரத்தையும் தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைவாகி இருக்கிறது. அதிலும் கடந்த 3 நாட்களாகத் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை விட குறைந்து இருக்கிறது. மேலும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 93% ஆக அதிகரித்து உள்ளது. இந்த விகிதம் ஒட்டுமொத்த இந்திய அளவை பொறுத்தவரை மிகவும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 88.8% ஆக இருக்கும்போது தமிழகம்தான் இந்தியாவிலேயே அதிகபட்சமான குணமடைந்தோரின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இதுவரையில் தமிழகத்தில் 6,46,555 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். மேலும் தற்போது உள்ள பாதிப்பு எண்ணிக்கை 91 லட்சத்தை எட்டியிருக்கிறது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களை விடக் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. RT-PCR கொரோனா பரிசோதனை செய்வதிலும் தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது.
கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்ற புகாரிலும், சென்னை தியாகராய நகரிலுள்ள குமரன் சில்க்ஸ் ஜவுளி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து உள்ளனர். இதுபோன்ற தீவிர நடவடிக்கைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது நடந்து வருகிறது. சென்னையில் 393 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதேபோல முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் முக்கிய இடங்களில் காவலர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களிலும் தெருக்களிலும் தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியான அம்மா கோவிட் -19 வீட்டு பராமரிப்பு திட்டத்தில் முதல் நிலை நோயாளிகள் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வசதி நடமாடும் கொரோனா பரிசோதனை , வீடுகளுக்கே நேரடியாகச் சென்று உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்தல், கூடுதல் கொரோனா சிறப்புச் சிகிச்சை மையம் அமைத்தல் போன்று கொரேனாவை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய நகரங்கள், அதிக ஊழியர்கள் வேலை செய்யும் இடங்கள், பொது இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த உள்ளது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கண்ட காரணத்தால் மட்டுமே தற்போது கொரோனா பிடியில் இருந்து தமிழகம் படிப்படியாக மீண்டு வருகிறது. கொரேனாவிற்கு எதிரான இந்த யுத்தத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் தமிக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அவ்வப்போது கோரி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout