தேர்தல் தேதி அறிவிப்பை ஒட்டி ராஜதந்திரியாக மாறிய தமிழக முதல்வர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழகம் உட்பட மேலும் 4 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாக இருந்த கடைசி நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு நலம் பயக்கும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
இத்தருணத்தில் அவர் ராஜதந்திராக செயல்பட்டதாகவும் அமைச்சர்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடும். இந்த காலத்தில் எந்தவித புதிய திட்டங்களையோ அறிவிப்புகளையோ வெளியிட முடியாது. டில்லியில் வெளியிட உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று டில்லியில் இருந்து செய்தியாளர்கள் குழு மூலம் செய்திகள் வந்தவுடன் ஊடகங்கள் அதனை பிரேக்கிங் செய்திகளாக வெளியிட்டது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் அலர்ட் ஆகின.
இதனால் தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர்கள் சந்திப்பிற்காக அனைவரும் காத்து கிடந்தனர். அதே சமயம் தேர்தல் தேதி ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருக்கும் என்று தங்களது யூகங்களை பத்திரிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பினர். இதற்கிடையே தமிழக சட்டமன்ற கூட்டம் காலை தொடங்கி நடைபெற்று வந்தது. தலைமை தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு குறித்த தகவல்கள் மக்களை சென்றடைவதற்குள் தமிழக மக்களை மகிழ்விக்கும் விதமாக தமிழக முதல்வர் நகைக்கடன் அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெறப்பட்ட கடனையும் தள்ளுபடி செய்தார். அதோடு நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வந்த வன்னியர் உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஒப்புதலையும் அவர் அறிவித்தார். அந்த அறிவிப்பில் வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீட்டு முறையில் 10.5% உள்இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மேலும் முழு அறிக்கை வந்தவுடன் இது மாற்றி அமைக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தார்.
இந்த அறிவிப்புகள் அனைத்தும் தேர்தல் தேதி குறித்த தகவல் வெளிவருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தேர்தல் தேதி அறிவிப்பு நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்த ராஜதந்திரியாக செயல்பட்டார் என்று பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments