ஈழத்தமிழ் பாடகியை அறிமுகம் செய்யும் பிரபல இசையமைப்பாளர்: இன்று பாடல் ரிலீஸ்

  • IndiaGlitz, [Tuesday,August 02 2022]

ஏற்கனவே பல புதிய பாடகர்கள், பாடகிகள் அறிமுகம் செய்துள்ள பிரபல இசையமைப்பாளர் தற்போது ஈழத்தமிழ் பாடகி ஒருவரை தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி இமான் இசை திறமையுள்ள சாமானியர்களை கூட தன்னுடைய படங்களில் பாடுவதற்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஈழத்தமிழ் பாடகி ஒருவரை தான் இசையமைத்த ’பொய்க்கால் குதிரை’ என்ற திரைப்படத்தில் பாடகியாக அறிமுகம் செய்துள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

இன்னொரு ஈழத்தமிழ் திறமையான பாடகியான ஆஷ்னா சசிகரன் என்பவரை ’பொய்க்கால் குதிரை’ படத்தில் பாட வைத்துள்ளேன். இங்கிலாந்தில் தற்போது இருக்கும் அவர் இந்த பாடலை பாடியுள்ளார். பாடலாசிரியர் கார்க்கி அவர்களால் எழுதப்பட்டு ஆஷ்னா பாடிய இந்த பாடல் இன்று வெளியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் பொய்க்கால் குதிரை’ படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபுதேவா, ரைசா வில்சன், வரலட்சுமி, பிரகாஷ்ராஜ், ஜாஜ் கொகைன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஈழத்தமிழ் பாடகியை திரையுலகில் அறிமுகப்படுத்திய டி இமான் அவர்களுக்கு இசை ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.