Thalaivaa Release Date Confirmed(தமிழ்)
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிப்பில் இளையதளபதி விஜய -
அமலாபால் ஜோடி நடிக்கும் தலைவா படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.இந்த படத்தில் விஜய்யுடன் சத்யராஜ், சந்தானம், ராகிணி, ஒய்.ஜி.மகேந்திரன், தம்பிராமையா, மனோபாலா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
மும்பை, ஆஸ்திரேலியா உட்பட பல இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ்ஜெயினிடம் கேட்டபோது, தலைவா படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. வழக்கமான விஜய் படங்களை விட இந்த படத்திற்காக விஜய் ரொம்பவே உழைத்திருக்கிறார். அதோடு, நடிகர் விஜய் உண்மையில் சினிமாத்தனம் இல்லாத தயாரிப்பாளர்களின் நடிகராக இருக்கிறார்.
மும்பையில் மூன்று மாதங்கள் இதற்காக பிரமாண்ட செட் போட்டு படப்பிடிப்பு நடத்தினோம். ஆஸ்திரேலியாவில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அப்போதெல்லாம் எப்போது கூப்பிட்டாலும் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தயாரிப்பாளர்களின் சிரமம் அறிந்தவர் விஜய். அதனால், விரயங்கள் ஏற்படாமல் ரொம்ப கவனமாகவே நடித்து கொடுத்தார்.
படத்தின் காதல், மோதல், அதிரடி ஆக்ஷன், காமெடி என எல்லாம் கலந்து இருக்கிறது. ரம்ஜான் கொண்டாட்டமாக அந்த தினத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
Follow us on Google News and stay updated with the latest!
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com