அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு தலிபான்கள் ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு!
- IndiaGlitz, [Sunday,October 11 2020]
கடந்த முறை நடந்த அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் எதிர்த்துப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் எப்படி வெற்றி பெற்றார் என்ற புதிர் இன்னும் விலகாமல் உள்ளது. டிரம்ப் வெற்றியின் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த முறை மீண்டும் அமெரிக்க அதிபராக போட்டியிடும் ட்ரம்புக்கு தலிபான்கள் ஆதரவு தருவதாக தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை தகர்த்து ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் படுகொலைக்கு காரணமான அல்கொய்தாவுடன் நெருங்கிய தொடர்புள்ள தலிபான்கள், வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு அமெரிக்கர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
தலிபான்களின் ஆதரவு தனக்கு தேவை இல்லை என்று டிரம்ப் தரப்பினர் மறுப்பு தெரிவித்திருந்தாலும், டிரம்புக்கு தலிபான்களின் ஆதரவு அறிவிப்பு அமெரிக்கர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக இருக்கும் அமெரிக்க ராணுவ படைகள் வரும் கிறிஸ்துமஸ் தினத்திற்குள் திரும்பத் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்திருப்பதும் அமெரிக்காவின் நட்பு நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் டிரம்பின் கோமாளித்தனமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மக்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.