ஆட்டத்தைத் துவங்கிவிட்ட தாலிபான்கள்… நடைமுறைக்கு வந்த பகீர் சட்டம்!

  • IndiaGlitz, [Monday,August 23 2021]

தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த சில தினங்களில் பெண் ஊடகவியலாளர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப் பட்டுள்ளனர். மேலும் அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட பிறகும் பெண் கவர்னர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில் தற்போது ஹெரஸ் மாகாணத்தில் இருபாலினர் கூட்டு கல்விமுறைக்கு தடைவிதித்து உள்ளனர். அதோடு பெண்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பெண்களாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூறியிருப்பதும் குறிப்பிட்டத்தக்கது.

இந்த விதிமுறை பல்கலைக்கழக பிரதிநிதிகள் மற்றும் தனியார் கல்வி பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே நடைமுறைக்கு கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஷரியா சட்டத்தின்படி தாலிபான்கள் ஆட்சி செயல்படும் எனக் கூறியிருந்த நிலையில் இருபாலினர் கல்விமுறைக்கு தடை எனும் முதல் சட்டத்தை (ஃபத்வா) தாலிபான்கள் கொண்டு வந்துள்ளனர். இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள ஹெரஸ் மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 40,000 மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

More News

'சார்பட்டா பரம்பரை' திரையரங்குகளில் வெளியிடுவதில் சிக்கலா?

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலர் நடித்த 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

டுவிட்டரில் கெத்து காட்டிய அஜித்-விஜய்!

அஜித், விஜய் மற்றும் அவர்கள் நடித்து வரும் படங்களின் ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் கெத்து காட்டி உள்ள தகவல்கள் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சினிமா டிக்கெட் கட்டணம் உயருகிறதா? திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

பார்த்திபன் படத்தின் டைட்டிலை அறிவித்த விஜய்சேதுபதி!

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டிலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சற்றுமுன் அறிவித்துள்ளார்.

மலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழும் ரயில்: திரைப்பட படப்பிடிப்பின் திகில் வீடியோ!

மலையிலிருந்து ஓடும் ரயில் இன்ஜின் ஒன்று பள்ளத்தாக்கில் விழும் காட்சியின் படப்பிடிப்பு நடந்த நிலையில் அதுகுறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது