ஆட்டத்தைத் துவங்கிவிட்ட தாலிபான்கள்… நடைமுறைக்கு வந்த பகீர் சட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த சில தினங்களில் பெண் ஊடகவியலாளர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப் பட்டுள்ளனர். மேலும் அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட பிறகும் பெண் கவர்னர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில் தற்போது ஹெரஸ் மாகாணத்தில் இருபாலினர் கூட்டு கல்விமுறைக்கு தடைவிதித்து உள்ளனர். அதோடு பெண்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பெண்களாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூறியிருப்பதும் குறிப்பிட்டத்தக்கது.
இந்த விதிமுறை பல்கலைக்கழக பிரதிநிதிகள் மற்றும் தனியார் கல்வி பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே நடைமுறைக்கு கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஷரியா சட்டத்தின்படி தாலிபான்கள் ஆட்சி செயல்படும் எனக் கூறியிருந்த நிலையில் இருபாலினர் கல்விமுறைக்கு தடை எனும் முதல் சட்டத்தை (ஃபத்வா) தாலிபான்கள் கொண்டு வந்துள்ளனர். இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள ஹெரஸ் மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 40,000 மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout