6 பந்துகளில் சிறந்த பௌலர் என நிரூபித்து இருக்கிறார் நட்டி… அசந்துபோன இங். வீரரின் பாராட்டு!
- IndiaGlitz, [Monday,March 29 2021] Sports News
4 டெஸ்ட் போட்டி, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட சுற்றுப் பயணத்திற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த மாதம் இந்தியாவிற்கு வருகை தந்தது. முதலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கிய இந்தத் தொடர் போட்டி அடுத்து அகமதாபாத், பூனே என்று அனைத்துத் தொடர் போட்டிகளிலும் இந்தியா முன்னிலை பெற்று வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களை அனைவரும் மெச்சி வருகின்றனர். இந்நிலையில் 3 ஆவது ஒருநாள் போட்டிக்காக நேற்று கடைசி ஓவர் வீசிய தமிழக வீரர் நடராஜனை மனதார பாராட்டி மகிழ்ந்து இருக்கிறார் எதிரணி வீரர் சாம் கர்ரன். காரணம் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 200 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்து கொண்டு இருந்தது. அப்போது களம் இறங்கியவர்தான் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன்.
7 விக்கெட்டுகளை கடந்து 8 ஆவது விக்கெட்டுக்காக களம் இறங்கிய இவர் தொடர்ந்து தனது அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 ரன்களைக் குவித்து இருந்தார். மேலும் 8 ரன்களை மட்டும் அடித்துவிட்டால் போதும் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டித் தொடரில் வெற்றிப் பெற்று சொந்த நாட்டிற்கு நடையைக் கட்டலாம். இந்த நிலைமையில் தான் யாக்கர் மன்னன் நடராஜனுக்கு கடைசி ஓவரை வழங்கினார் கேப்டன் விராட் கோலி.
இந்த கடைசி 6 பந்துகளில் இங்கிலாந்து அணியின் ரன்களை மட்டுப்படுத்த வேண்டும். அப்படி மட்டுப்படுத்தினால் மட்டுமே இந்தியா வெற்றிப்பெறும். எனவே யாக்கர் மன்னன் தனது பந்து வீச்சை தொடருகிறார். மேலும் சாம் கர்ரனின் பேடில் பந்து தூக்கி வீசப்படாமல் சறுக்கி கொண்டு போவதற்காகத் தனது ஒட்டுமொத்த திறமையையும் காட்டுகிறார். நல்ல வேளையாக ரன்கள் எதுவும் எடுக்காமலே ஓவர் முடிவடைகிறது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுகிறது.
இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் யாக்கர் மன்னனின் பந்து வீச்சைப் பார்த்து பலரும் ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் எதிரணியில் இருந்து கொண்டே நடராஜனின் கடைசி பந்து வீச்சை எதிர்க்கொண்ட சாம் கர்ரன், “நேற்றைய போட்டியில் நடராஜன் சிறப்பாக பந்து வீசியதாகவும் 6 பந்துகளை மட்டுமே கெண்டு ஆட்டத்தை மாற்றி தான் ஏன் மிக சிறப்பான பௌலராக இருபபதை மீண்டும் நிரூபித்து உள்ளார்” என்றும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
அதேபோல இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், “நேற்று நடராஜன் தன் பதற்றத்தை தணித்துக் கொண்டு வீசினார். சாம் கரனின் பேடுக்கு பந்து சறுக்கிக் கொண்டு வருமாறு தாழ்வாக வீசினார். இத்தகைய ஓவர்களில் நடராஜனின் இருதயத் துடிப்பு நெஞ்சுப் படபடப்பை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை மேலும் யார்க்கரை பிரமாதமாக துல்லியமாக வீசியதற்கு அவருக்கு முழு பாராட்டுகள்” என புகழ்ந்து தள்ளி இருக்கிறார் மைக்கேல் வான் என்பதும் குறிப்பிடத்தக்கது.