தூங்கி, தூங்கி முகம் வீங்கி போச்சா? நடிகை தம்மன்னா கூறும் எக்செலண்ட் டிப்ஸ்!

  • IndiaGlitz, [Tuesday,July 20 2021]

கொரோனா நேரத்தில் பலரும் நேரம், காலம் பார்க்காமல் தூங்கிக் கொண்டே இருக்கிறோம். இப்படி சரியான நேரத்திற்குத் தூங்கி எழும் பழக்கம் இல்லாதபோது சிலருக்கு முகம் வீங்கிப் போகிறது. இதுபோன்ற சமயங்களில் வெளியே போக வேண்டி இருந்தால் என்ன செய்வது என்ற குழப்பம் வரும். இதுகுறித்து பிரபல நடிகை தமன்னா ஒரு அருமையான டிப்ஸை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தூங்கி எழும்போது காலையில் உங்களுடைய முகம் வீங்கிப்போய் இருந்தால் உடனே ஒரு பவுல் அல்லது பாத்திரத்தில் நிறைய ஐஸ்கட்டிகள் நிரம்பிய தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தண்ணீரில் இரண்டு மூன்று தடவை முகத்தை புதைத்து எடுத்தாலே போதுமானது. வீங்கிய இடம் சரியாகி விடும் எனக் கூறியிருக்கிறார்.

நடிகை தமன்னா வொர்க் அவுட், உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் எனத் தொடர்ந்து உடல்நலம் சார்ந்த விஷயங்களை தனது ரசிகர்களோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் முகம் வீங்கி போனால் என்ன செய்வது என்பது குறித்து அவர் பதிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றிருக்கிறது.

மேலும் தூங்கி வழிவதால் மட்டுமல்ல, சில நேரங்களில் நோய் அறிகுறி காரணமாகவும் முகம் வீங்கி இருக்கலாம். அதுவும் குறிப்பாக கல்லீரல் தொடர்பான பிரச்சனை வரும்போது உடலில் இருக்கும் பித்தநீர் வெளியேற வாய்ப்பு இல்லாமல் முகம் வீங்கிப் போகும். பொதுவா இதுபோன்ற கல்லீரல் பிரச்சனைகள் மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு வருகிறது. எனவே இதுபோன்ற அறிகுறி இருக்கும்போது எச்சரிக்கையாக மருத்துவரை அணுகுவது நல்லது.

சிலருக்கு காது பக்கத்தில் இருந்து தோல் தடித்து காணப்பட்டால் அவருக்கு இருதயம் தொடர்பாக பிரச்சனைகள் இருக்கலாம். மேலும் உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருக்கும்போது இதுபோன்று முகம் வீக்கமாகக் காணப்படும். எனவே உடலுக்குத் தேவையான தண்ணீரை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.