சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? வைரலாகும் "சின்ன தல" யின் கணிப்பு!

சிஎஸ்கே அணி ரசிகர்களால் “சின்னத்தல“ என்று கொண்டாடப்பட்ட சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கடும் வருத்தத்தை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர் சிஎஸ்கேவை விட்டுகொடுக்காமல் பேசியிருப்பதோடு, அடுத்த கேப்டன் யார் என்று கணித்து இருப்பதும் ரசிகர்களிடையே பெரும் மலைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் இடம்பெறாத சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போது வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட அவர் சிஎஸ்கே இந்த ஆண்டு சிறந்த ஆல்ரவுண்டர்களோடு களம் இறங்க இருக்கிறது. மேலும் ஜடேஜா மற்றும் மொயின் அலி ஆகியோர் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா மற்றும் டுவைன் பிராவோ ஆகிய நால்வரில் ஒருவர்தான் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனாக வருவார்கள் என்றும் இவர்கள் நீண்ட காலமாக சிஎஸ்கே அணிக்காக விளையாடி நல்ல அனுபவம் பெற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி 15 ஆவது சீசன் போட்டியில் வெற்றிக் கோப்பையுடன் திரும்ப வேண்டும் என்று கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு தோனி தனது ஓய்வை அறிவிக்க உள்ளார் என்பது போன்ற கருத்துகளும் உலா வந்துக் கொண்டிருக்கின்றன. இதனால் அடுத்த கேப்டன் யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் சிஎஸ்கே அணியை பிரதிநிதித்துவப்படுத்தி நீண்ட காலமாக விளையாடிவரும் ரவீந்திர ஜடேஜா அணியை வழிநடத்தும் திறனைக் கொண்டுள்ளார் என்று சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். இதனால் சிஎஸ்கே ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

நண்பர் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின் டுவிட்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து கூற அதற்கு நன்றி கூறி முதல்வர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் டுவிட் செய்துள்ளார். 

ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு...இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய்சேதுபதி

தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு  கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான்.

30 வருடங்களுக்கு பின் கே பாக்யராஜ் உடன் இணையும் நடிகை!

30 வருடங்களுக்கு முன்பு கே பாக்யராஜ் ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை: திடுக்கிடும் காரணம்!

சென்னையை சேர்ந்த தேசிய கபடி வீராங்கனை தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்புவின் கார் மோதி விபத்து: முதியவர் பரிதாப பலி!

நடிகர் சிம்புவின் கார் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.