close
Choose your channels

ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய ஸ்ரீதேவி!

Monday, February 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த 80களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருக்குமே சிறந்த திரை ஜோடியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவருடைய மறைவு இருவருக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பேரிழப்பாகும். இருவருமே தங்களுடைய சமூக வலைத்தளங்களில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து மிக வருத்தத்துடன் கூடிய பதிவை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் ரஜினி, கமல் , ஸ்ரீதேவி ஆகிய மூவரும் இணைந்து நடித்த ஒரு படத்தில் ரஜினியை விட ஸ்ரீதேவி அதிக சம்பளம் வாங்கியுள்ளார். சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை ஸ்ரீதேவி, 'மூன்று முடிச்சு' படத்தின் போது கமல் பெரிய நடிகர் என்றும், ரஜினிகாந்த் அப்போதுதான் வளர்ந்து வரும் நடிகர் என்றும் கூறிய ஸ்ரீதேவி, அந்த படத்திற்கு கமல்ஹாசனுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் என்றும், தனக்கு ரூ.5 ஆயிரமும் ரஜினிக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் கிடைத்ததாகவும் கூறியிருந்தார்.

கே.பாலசந்தர் இயக்கிய 'மூன்று முடிச்சு' திரைப்படத்தில் கமல்ஹாசன் கெளரவ வேடத்தில் மட்டுமே நடித்திருந்தார் என்பதும் ரஜினி வில்லனாகவும், ஸ்ரீதேவி நாயகியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment