மனைவி, குழந்தைகளை கொலை செய்து வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய சாப்ட்வேர் எஞ்சினியர்

  • IndiaGlitz, [Monday,April 22 2019]

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசிதாபாத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் அதன் வீடியோவை தனது குடும்பத்தினர் உள்ள வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசிதாபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் சுமித் குமாருக்கு அன்ஷூபாலா என்ற மனைவியும், ஆரவ், ஆக்ரிதி என்ற இரட்டை குழந்தையும், பிரத்மேஷ் என்ற குழந்தையும் உள்ளனர். அன்ஷூபாலா ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வேலையை ராஜினாமா செய்த சுமித்குமார், பொருளாதார கஷ்டத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்துவிட்டு பின் கூர்மையான ஆயுதங்களால் கொலை செய்ததாக தெரிகிறது. மேலும் கொலை செய்த பின்னர் வீடியோ எடுத்து தனது குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குரூப்பில் அதன் வீடியோவை அனுப்பியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்ஷூபாலாவின் சகோதரர், மற்றும் சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சுமித்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

More News

கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்: பூசாரி கைது!

திருச்சி அருகே உள்ள துறையூர் முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் விழாவின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

35 நாட்களில் முடிவுக்கு வந்தது ஜோதிகாவின் அடுத்த படம்!

'36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா, அதன்பின்னர் 'மகளிர் மட்டும், 'நாச்சியார்', 'செக்க சிவந்த வானம்' மற்றும் 'காற்றின் மொழி'

'காமசூத்ரா' நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்

3D டெக்னாலஜியில் உருவான காமசூத்ரா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சாய்ராகான் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டிக் டாக் செயலியின் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம் 

'டிக்டாக்' செயலியால் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்களால் கலாசாரம் இழிவுபடுத்தப்படுவதாகவும், இதில் உள்ள வீடியோக்கள் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாலும்

உடலில் தோல் இன்றி பிறந்த குழந்தை!

மரபணு குறைபாடு காரணமாக, பிரிசில்லா என்கிற 25 வயது பெண்ணுக்கு உடலில் தோல் இன்றி பிறந்துள்ளது குழந்தை...