இதுவரை கொரோனா!!! 

  • IndiaGlitz, [Saturday,March 14 2020]


கொரோனா நோய் தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி வுஹான் மாகாணத்தில் இருந்து பரவியது. தற்போது 145 நாடுகளில் கொரோனா தனது முத்திரையை பதித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு நாடுகளிலும் இந்த வைரஸ் ஏற்படுத்திய தாக்கங்களை பற்றிய சிறு தொகுப்பு.

கொரோனா தொற்றினால் “உலகம் முழுக்க பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 145,682 பேர். இதில் நோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 72,532 பேர். இறப்பு 5,436 பேர்“ என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சர்வதேச குழுவால் இயக்கப் படும் Dasax க்கு சொந்தமான Worldometer இணையதளம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கொரோனா பரவியுள்ள நாடுகளின் நிலவரம் பற்றியும் இந்த இணையதளம் முழுமையான தகவல்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

கொரோனா பரவிய ஒரு வாரத்திலேயே இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தன்மை உடையது என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். முதலில் சீனாவின் வுஹான் மாகாணம் முழுவதுமாக தடை செய்யப் பட்ட பகுதியாக அறிவிக்கப் பட்டு நோய் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப் படுத்தப் பட்டனர். அந்நாட்டின் அனைத்து தரைவழிகளும் தடை செய்யப்பட்டன.

வுஹானை அடுத்து சில மாகாணங்களில் நோய் தொற்று தீவிரமாகப் பரவிய நிலையில் பேருந்து போக்குவரத்தும் தடை செய்யப் பட்டது. சீனாவில் இருந்த மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை அந்தந்த நாடுகள் பத்திரமாக மீட்கும் நடிவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில் மற்றநாடுகளுக்கும் கொரேனா பரவும் அபாயம் இருப்பதால் உலக சுகாதார நிறுவனம் உலகம் முழுவதுக்குமான அவசர நிலையை பிறப்பித்து உத்தரவிட்டது.

சீனாவிற்கு வெளியே பிலிப்பைன்ஸ் நாட்டில் முதல் மரணம் நிகழ்ந்தது. தற்போது உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனா நோய்க்கு எதிராகப் போராடி வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்தியாவில் 82 பேர் இந்நோயினால் பாதிக்கப் பட்டிருப்பதாக இந்திய சுகாதாரத் துறை தெரிவித்து இருக்கிறது. இதில் இந்தியர்கள் 65 பேர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 17 பேர் என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது இதில் 10 பேரின் உடல் நிலை தேறி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஸ்காட்லாந்தில் முதல் கொரோனா மரணம் நேற்று புதிதாகப் பதிவாகியது என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஸ்பெயினில் 120 பேர் மரணம் மற்றும் 4,209 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவலின் மையப் புள்ளியாக தற்போது ஐரோப்பிய நாடுகள் இருந்து வருகின்றன. எனவே உலக சுகாதார நிறுவனம் அந்நாடுகளில் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறது.

இத்தாலியில் நேற்று ஒருநாள் மட்டும் 250 பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதுவரை அந்நாட்டில் கொரோனா பாதிப்பினால் 1,266 பேர் மரணத்தைத் தழுவியிருக்கின்றனர். மேலும், 17,660 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதும் உறுதி செய்யப் பட்டு இருக்கிறது.
ஈரான் நாட்டில் 514 பேர் உயிரிழப்பும், 11,364 பேருக்கு நோய்த் தொற்று இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.

ஸ்பெயினில் 120 பேர் இதுவரை இந்நோய் தொற்றினால் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், 4,231 பேருக்கு தொற்று இருப்பதும் உறுதிச் செய்யப் பட்டு இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டில் 2,876 பேருக்கு நோய்த் தொற்றும் 79 பேர் இறப்பும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஜெர்மனியில் 3,062 பேருக்கு நோய் தொற்று இருக்கிறது. 5 பேர் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஜப்பான் நாட்டில் 21 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். மேலும், 700க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.

அமெரிக்காவில் கொரோனா நோய் தொற்று அங்குள்ளள பெரும்பாலான மாநிலங்களில் பரவியிருக்கும் நிலையில் அதிபர் ட்ரம்ப் அந்நாட்டில் அவசரநிலையை பிறப்பித்து உத்தரவிட்டு இருக்கிறார். 40 பேர் உயிரிழப்பு மற்றும் 1,701 நபருக்கு நோய் தொற்று இருப்பதும் உறுதிச் செய்யப் பட்டு இருக்கிறது.

பிரான்ஸ் 79 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,661 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. லண்டனில் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருந்த மாரத்தான் போட்டிகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன.

ஜெர்மனியில் 3,062 நபருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டு இருக்கிறது.

தென்கொரியாவில் கொரோனாவின் தாக்குதல் அதிகமாக பரவி வருவதைப் பார்த்து அந்நாட்டில் கடுமையான அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், 72 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8,086 பேருக்கு நோய் தொற்று இருப்பதும் உறுதி செய்யப் பட்டு இருக்கிறது.

தற்போது சீனாவில் நோயின் தாக்கம் குறைந்து வருகிறது எனவும் உலக சுகாதார அமைப்புத் தெரிவித்து இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் இதன் பரவலைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தப் பட்டுள்ள நிலையில் பல நாடுகளில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

More News

கொரோனா பெயரை சொல்லி பேருந்து டிரைவரை பயமுறுத்திய கல்லூரி மாணவி: சென்னையில் பரபரப்பு

பேருந்து டிரைவரிடம் உடனடியாக பேருந்து நிறுத்தும்படியும், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் கூறி பயமுறுத்திய கல்லூரி மாணவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கொரோனாவால் பலியான இரண்டாவது இந்தியர்: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக இந்த வைரஸ் பரவியது வருவது மட்டுமின்றி உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

பைத்தியக்காரன், மடையன், முட்டாள்: இயக்குனர் பேரரசு குறிப்பிடுவது யாரை?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்துதான் கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் செய்தியாகவும் விவாதமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது

5 லட்ச ரூபாய் கொடுத்தால் ரஜினி குறித்து கருத்து கூறுவேன்: பிரபல நடிகர் நிபந்தனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் திட்டங்கள் குறித்தும் கொள்கைகள் குறித்தும், தனது அரசியல் கட்சி எப்படி செயல்படும் குறித்தும்,

ரஜினியை திடீரென சந்தித்த கலைப்புலி எஸ்.தாணு: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்ற விவாதம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் செய்தியாளர்களை