ஆனந்த யாழை மீட்டுகிறாய்… நெட்டிசன்களின் மனதைத் தொட்ட பிரபல பாடகரின் வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய சினிமாவில் முன்னணி பாடகராக வலம்வரும் உன்னி கிருஷ்ணன் தனது செல்ல மகளுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அப்பா- மகளுக்கான பந்தம் என்பது மற்ற எல்லாவற்றையும் விட அதிக நெகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. அந்த வகையில் பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது செல்ல மகளான உத்ராவின் தலைமுடியை பின்னிவிடுகிறார். மேலும் காலம் காலமாக இதுபோன்ற கலாச்சாரங்கள் நம்மிடையே இருந்து வருகிறது. ஆனால் இது எனக்கு புது அனுபவமாக இருந்தது எனக் கூறியுள்ள உன்னிகிருஷ்ணன் அதுவும் எனது மகளுக்காக இதைச் செய்யும்போது விளையாட்டாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி பாடகராக இருந்து வருவதோடு இந்தியிலும் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். 12 வயது முதல் கர்நாடக இசையிலும் பின்னணி பாடலிலும் கலக்கி வரும் இவர் தனது திறமைக்காக பல விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தொடர்ந்து தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் ஜட்ஜாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தந்தையைப் போலவே அவரது மகள் உத்ராவும் பின்னணி பாடலிலும் அசத்தி வருகிறார். இவர் “சைவம்“ படத்தில் பாடிய “அழகு“ பாடலுக்கு தேசிய விருதை தட்டிச்சென்றதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து “தெறி“, “பிசாசு“, குறும்படமான “லஷ்மி“ போன்ற படங்களில் பின்னணி பாடியிருக்கிறார். அந்த வகையில் இசை உலகிலும் பிசியாக இருந்துவரும் உன்னி கிருஷ்ணன் தனது மகள் உத்ராவின் தலை முடியை பின்னிவிட்டு தனது பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ ரசிகர்கள் மனதை கவர்ந்து வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments