close
Choose your channels

கேங்ஸ்டர் படத்தில் ஸ்ருதிஹாசன்

Saturday, June 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் இயக்கும் கேங்ஸ்டர் படம் ஒன்றில் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு 'சிங்கம் 3' உள்பட மூன்று படங்களில் நடித்த ஸ்ருதிஹாசான் இந்த ஆண்டு ஒப்பந்தமாகியுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. .

இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'துப்பாக்கி' படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கும் இந்த படம் பீரியட் படமாக உருவாகி வருவதாகவும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம்பெயர்த்துள்ளார் இயக்குனர். இதில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

பொதுவாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும். இதனால் இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்து பேசிய இயக்குனர் அவருடைய கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். தற்போது, அவர் லண்டனில் சர்வதேச இசை கோர்ப்பு சம்மந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கும்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment