அதிபரே கடந்த 10 ஆண்டுகளாக வரிகட்டல… நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!


 

அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடு பிடித்து இருக்கும் சூழலில் அதிபர் ட்ரம்ப்க்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் வெளியிட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு பிரபல மாடல் அழகி ஒருவர் அதிபர் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். இந்நிலையில் அடுத்ததாக பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அதிபர் ட்ரம்ப் தனது சொத்துகளுக்கான வரியை கடந்த 10 ஆண்டுகளாக செலுத்தவே இல்லை எனத் தெரிவித்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதில், டொனால்டு ட்ரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து கடந்த 15 ஆண்டுகளாக வருமானத்தை ஈட்டி வருகிறார். ஆனால் இந்த வருமானத்திற்கான வரி வருவாயை கடந்த 10 ஆண்டுகளாக செலுத்தவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறது. மேலும் தனது சொத்து நிறுவனங்கள் கடுமையான இழப்பீட்டைச் சந்தித்து வருவதாக ட்ரம்ப் கூறியதாகவும் அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

கடந்த 2016-2017 ஆம் ஆண்டில் ட்ரம்ப் 750 டாலர் வரியை செலுத்தியதாகக் கூறப்படும் நிலையில் அதற்கு பின்பு கடந்த 10 வருடங்களாக எந்த வரிவருவாயையும் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்ப்பின் நிறுவனங்கள் கடந்த 2018 இல் 7,427.4 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டிய நிலையில் மேலும் வருவாய் இழப்பீடு ஏற்பட்டதாக 47.4 மில்லியன் டாலர்களை இழப்பீடாகக் கேட்டதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டில் அவரது நிறுவனங்களின் வரி வருவாய் குறைந்தது 4,434.9 மில்லியன் டாலராக இருக்கலாம் எனவும் நியூயார்க் டைம்ஸ் தன்னுடைய கருத்துக் கணிப்பில் தெரிவித்து இருக்கிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ட்ரம்ப் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது மறுப்பு தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவரது வழக்கறிஞர் ஆலன் கார்டன், நியூயார்க் டைம்ஸ்க்கு அளித்த அறிக்கையில் “கடந்த தசாப்தத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் அரசாங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களை தனிநபர் வரியாக செலுத்தியுள்ளார். இதில் 2015 இல் தனது வேட்புமனுவை அறிவித்ததில் இருந்து மில்லியன் கணக்கான தனிப்பட்ட வரிகளை செலுத்தி உள்ளார்” என்று விளக்கம் அளித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

முகக்கவசங்களை இப்படி பயன்படுத்துவது ரொம்ப அவசியம்… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைக் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

எஸ்பிபிக்கு இரங்கல்: அஜித்தை மறைமுகமாக தாக்குகிறாரா அரசியல் விமர்சகர்?

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெயம் ரவியின் அடுத்த படம் ஓடிடி ரிலீஸா? பரபரப்பு தகவல் 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் நாடு முழுவதும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன

மீண்டும் ஊரடங்கா? அதிக தளர்வுகளா? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இதுவரை சுமார் 6 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர ரசிகையின் மரணத்திற்கு ஓவியாவின் நெகிழ்ச்சியான ரியாக்சன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் எத்தனை சீசன்கள் வந்தாலும், முதல் சீசனின் போட்டியாளர்களின் ஒருவரான ஓவியாவுக்கு இணையாக இன்னொரு போட்டியாளர் வருவது கடினம்