நான் சுங்கக்கட்டணம் தரமாட்டேன்- நடுரோட்டில் நிர்வாணப் போராட்டம் நடத்திய சாமியார்!!!
- IndiaGlitz, [Thursday,September 03 2020]
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சுங்கச்சவாடி ஒன்றில் மாடாதிபதி ஒருவர் சுங்கக்கட்டணம் செலுத்தமாட்டேன் எனக் கூறியதோடு ஆடைகளைக் களைந்து திடீரென சாலையில் நிர்வாணப் போராட்டத்தில் குதித்து இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் சிக்கபசர்னாபுரா மாவட்டத்தில் கவுரி பிதனூர் என்ற பகுதியில் சித்கோ மிஷன் என்ற ஆசிரம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த ஆசிரமத்தின் மாடாதிபதியாக ஆரோ பாரதி சுவாமி இருந்து வருகிறார்.
இவர் பெங்களூரில் இருந்து கவுரி பிதனூருக்கு சாலை வழியாகப் பயணம் செய்தபோது அங்கிருந்த சுங்கச்சவாடியில் பணம் கேட்டு இருக்கின்றனர். அதற்குப் பதில் அளித்த சுவாமியார் மடாதிபதிகளுக்கு எல்லாம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. நான் கட்டணம் தரமாட்டேன் எனத் தெரிவித்து இருக்கிறார். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் அரசாங்கம் கொடுத்துள்ள வழிகாட்டுதலின்படி அமைச்சர்கள், நீதிபதிகளுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக் கூறப்பட்டு இருக்கிறது எனத் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்நிலையில் கோபமடைந்த சாமியாரின் சீடர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதே சுவாமியார் நான் சுங்கக் கட்டணம் செலுத்த மாட்டேன எனக் கூறிக்கொண்டே ஆடைகளைக் களைந்து நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் சாலை வழியாக சென்றோரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தச் சாமியார் மாடதிபதிகளுக்கு எல்லாம் சுங்கக் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என எழுதிக் கொடுங்கள் அப்போதுதான் நான் போராட்டத்தை நிறுத்துவேன் எனவும் எச்சரிக்கை செய்திருக்கிறார். இதனால் நிலைமையை சமாளிக்க சுங்கத்துறை அதிகாரிகள் நீங்கள் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டாம் இங்கு இருந்து செல்லுங்கள் என மன்னிப்புக் கேட்டு இருக்கின்றனர். தற்போது இச்சம்பவத்தை மேலிடத்துக்கு தெரிவிக்க இருப்பதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.