மதுக்கடைக்கு பதிலாக இனிப்பு கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்…. அலட்சியத்தால் நடந்த சுவாரசியம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசப் பிதா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா இந்தியாவில் விமர்சியாகக் கொண்டாடப் படுகிறது. அந்த நாளில் மதுக்கடை மற்றும் இறைச்சிக் கடைக்கு தடை விதிப்பது வழக்கம். அப்படி நேற்று கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்க வயல் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சீல் வைக்கும் பணியில் கலால் துறை அதிகாரிகள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது பேருந்து நிலையம் அருகில் இருந்த லிட்டில் பிளவர் எனும் மதுக்கடைக்கு சீல் வைப்பதற்கு பதிலாக அருகில் இருந்த ஷாமா எனும் இனிப்பு கடைக்கு கலால் அதிகாரிகள் சீல் வைத்துச் சென்றுள்ளனர். இதுதெரியாமல் நேற்று காலை எப்போதும் போல இனிப்பு கடையைத் திறக்க வந்த கடையின் உரிமையாளர் வந்திருக்கிறார். தன்னுடைய கடைக்கு சீல் வைத்து இருப்பது பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். இதனால் கலால் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது அவர்கள் விரைந்து வந்து இனிப்பு கடையில் இருந்த சீலை அகற்றிவிட்டு மதுக்கடைக்கு சீல் வைத்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள பலரும் கலால் துறை அதிகாரிகள் குறித்து அதிருப்தியை வெளியிட்டு உள்ளனர். தலைவர்கள் மற்றும் சுதந்திர தியாகிகளுக்கு இதுபோன்று மரியாதை செலுத்துவது உலகம் முழுவதும் இருந்து வரும் நடைமுறை. இந்த நாட்களில் அவர்களின் தியாகங்களை புகழ்ந்து பேசுவதோடு நிறுத்திவிடாமல் அவர்களின் கொள்கை மற்றும் கருத்துகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே பலரின் ஆவலாக இருந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout