சௌதி அரேபியாவில் முதல் முறையாகப் பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டிகள்!!!

  • IndiaGlitz, [Wednesday,February 26 2020]

 

சௌதி அரேபியாவில் வாழ்க்கை முறைகள் பெரும்பாலும் இஸ்லாமிய சட்ட விதிகளின் படியே கடைப்பிடிக்கப் படுகிறது. உலகின் கடுமையான விதிகளைக் கடைபிடித்து வரும் நாடாக சௌதி அரேபியா இருந்து வருகிறது என பலத் தரப்புகளில் இருந்து விமர்சனங்களும் அவ்வபோது எழுந்தன.

சௌதியில் பெண்கள் இரவு நேரங்களில் தனியாக எங்கும் செல்வதற்கு தடை இருந்து வந்தது. ஒருவேளை காவல் துறையினர் விசாரிக்கும்போது தனியாகச் செல்வதற்கு தனது கணவர் அல்லது அப்பாவிடம் இருந்து அனுமதி கடிதத்தை வாங்கி வந்திருக்க வேண்டும். அப்படி அனுமதி கடிதம் இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப் பட்டது. மேலும், கார் ஓட்டுவதற்கும், வெளிநாடுகளுக்குத் துணை இல்லாமல் செல்வதற்கும் அனுமதி மறுக்கப் பட்டு இருந்தது. எந்த ஒரு பொது விளையாட்டுகளிலும் பெண்கள் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டு இருந்தது.

கடந்த 2018 இல் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது அதிகாரத்தின் கீழ் பல மாற்றங்களைக் அந்நாட்டில் கொண்டு வந்தார். அதன்படி பெண்களுக்கான பல செயல்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது. அதன் ஒரு பகுதியாகத் தற்போது பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டிகள் அந்நாட்டில் நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. பெண்கள் மத்தியில் விளையாட்டை ஊக்குவிப்பதற்காகவே இந்த லீக் போட்டிகள் நடத்த இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2018 இல் தான் சௌதி அரேபியாவில் முதல் முறையாக கால்பந்து மைதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப் பட்டனர். மேலும், பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கும் உரிமை கொடுக்கப் பட்டது.

2019 இல் பெண்கள் ஆண்களின் துணையில்லாமல் வெளி நாடுகளுக்குச் சென்று வருவதற்கும் அனுமதி அளிக்கப் பட்டது. சென்ற ஆண்டு வரை அந்நாட்டில் உணவகங்களில் ஆண்களும் பெண்களும் தனித் தனியாக அமர்ந்தே உணவருந்த வேண்டும். கடந்த வருடத்தில் தான் அதற்கான தடையும் நீக்கப் பட்டது.

மேலும், சில வருடங்களுக்கு முன்பு தான் சௌதியில் பெண்கள் தங்களது திருமணம், விவாகரத்து, குழந்தை பிறப்புகளை பதிவு செய்ய உரிமைப் பெற்றனர். மேலும், ஆண் பெண் வேறுபாடுகள் இன்றி பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கு சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது.

சௌதி அரேபியாவில் பெண்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப் படுகின்றனர் என அவ்வபோது சர்வதேச மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டி வருவதும் குறிப்பிடத் தக்கது.

அந்நாட்டில் பெண் சமூக நல ஆர்வலர்கள் பலர் சிறையில் அடைக்கப் பட்டு உள்ளனர் என்ற குற்றச் சாட்டும் இருந்து வருகிறது. சில தரப்புகளில் இருந்து பெண்களின் சீர்திருத்தத்திற்கு பல ஏற்பாடுகளை அந்நாடு செய்து தர முன் வரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

 

More News

மார்ச் 5ல் கமல்-ரஜினி இணைப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக அண்ணாத்த' படத்துடன் இன்னொரு படத்திலும் நடிக்க திட்டமிட்டு உள்ளதாக ஏற்கனவே வெளியான செய்திகளை பார்த்தோம்.

"என்னைவிட வடிவேலு கியூட்டாக இருக்கிறார்" – நடிகை ராஷ்மிகா மந்தனா

தன்னை விட வடிவேலு கியூட்டாக இருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்பதிவு ரசிகர்களிடையே தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெட்ரோல் பங்கில் தீ- தனி ஆளாய் தீயை அணைக்கும் சிங்கப் பெண் வைரல் வீடியோ

பெண்களின் வீரத்தை மையப்படுத்தி பிகில் படத்தில் வரும் “சிங்கப் பெண்ணே“  பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது

'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்

சூர்யா-ஹரி படம் குறித்த முக்கிய அப்டேட்!

சூர்யா தற்போது 'சூரரைப்போற்று' என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில் விரைவில் அவர் ஹரி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.