30 ஆண்டுகள் செய்தி வாசித்த பிரபலம் காலமானார்: பொதுமக்கள் இரங்கல்
- IndiaGlitz, [Sunday,August 14 2022]
அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசுவாமி காலமானார். அவருக்கு வயது 87.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சரோஜ் நாராயணசுவாமி. அவரது கம்பீரக் குரலை கடந்த 1980ஆம் ஆண்டுகளில் இருந்து பலர் வானொலியில் கேட்டு இருப்பார்கள்.
’ஆகாஷ்வாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி' என்ற குரல் பலருக்கு பரிட்சயம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்குரல் போல் இருந்தாலும் கணீர் குரலில் 30 ஆண்டுகள் செய்தி ஒலிபரப்புத் துறையில் பணியாற்றிய சரோஜ் நாராயணசுவாமிக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சரோஜ் நாராயணசுவாமி இன்று மும்பையில் தனது வீட்டில் காலமானார். அவருக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை பெற்ற சரோஜ் நாராயணசாமி டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலியில் கடந்த 1965-ஆம் ஆண்டில் செய்தி வாசிப்பாளராக பணியில் சேர்ந்து, சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் தனது கம்பீரமான, நேர்த்தியான உச்சரிப்பால் லட்சக்கணக்கான நேயர்களை பெற்றார். சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றிய சரோஜ் நாராயணசாமி கடந்த 1995ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவரது பூர்வீகம் தமிழகத்தை சேர்ந்த தஞ்சாவூர் என்பது குறிப்பிடத்தக்கது.