அடல்ட் காமெடி பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த கவுதம் கார்த்திக்

  • IndiaGlitz, [Thursday,February 07 2019]

கவுதம் கார்த்திக் நடித்த 'ஹர ஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார், சமீபத்தில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை தெலுங்கில் இயக்கினார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் தற்போதும் மீண்டும் கவுதம் கார்த்திக் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். ஆனால் இந்த படம் முந்தைய இரண்டு படங்கள் போல் அடல்ட் காமெடி படம் இல்லை என்பதும் இந்த படம் ஒரு த்ரில் சஸ்பென்ஸ் படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

'தீமைதான் வெல்லும்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயின் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோவா பகுதியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.