வரிஏய்ப்பு செய்து வெளிநாட்டில் சொத்துக் குவிப்பா? சச்சின் பற்றிய அதிர்ச்சி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியப் பிரபலங்கள் வரிஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்திருப்பது மற்றும் சொத்துக் குவித்துள்ளது தொடர்பான ஆவணங்களை அம்பலப்படுத்தும் பண்டோரா ஆவணங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பனாமா பேர்ப்பர்ஸ் எனும் அறிக்கை ஜெர்மனி ஊடகம் ஒன்றில் வெளியானது. இந்த அறிக்கையின்படி இந்தியாவைச் சேர்ந்த 336 உயர்மட்ட அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நாட்டின் தலைவர்கள், அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பல பெரிய பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக் குவிப்பில் ஈடுபட்ட விவகாரம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அந்தப் பட்டியலில் ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், டிஎல்ஃப் நிறுவனத்தின் தலைவர் கேபி சிங் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள், வினோத் அதானி போன்றோரின் பெயரும் இடம்பிடித்து இருந்தது.
தற்போது சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists (ICIJ) வெளியிட்டுள்ள பண்டோரா பேப்பர்ஸ் அறிக்கையில் 300 இந்தியப் பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் சச்சின் டெண்டுல்கர் பெயரும் இடம்பிடித்து இருக்கிறது.
மேலும் பனாமா பேப்பர்ஸ் வெளியான 3 மாதங்களில் விர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனத்தை கலைக்கும்படி சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டதாகவும் இதுதொடர்பாக அவரது வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டபோது, “இந்த முதலீடு சட்டப்பூர்வமானது இதுகுறித்து வரி அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது என சச்சின் கூறியதாகவும்“ தெரிவித்துள்ளார்.
வரிஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் சொத்துகளைக் குவிப்பது மற்றும் நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடர்பான பண்டோரா பேப்பர்ஸ் அறிக்கையில் சச்சின் டெண்டுல்கரின் பெயர் இடம் பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த அறிக்கையின்படி 300 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் சொத்துகளை குவித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments