ரூ.1 கோடி பரிசு; கோழியால் கொரோனா??? நிரூபித்தால் பரிசை வெல்லலாம்!!!
- IndiaGlitz, [Wednesday,March 18 2020]
கொரோனா பயத்தினால் மக்கள் இறைச்சி உணவுகளைத் தவிர்த்து வந்த நிலையில் கோழிகளுக்கும் கொரோனா பரவி வருகிறது என்பது போன்ற வதந்திகள் சமூக வலைத் தலங்களில் பரவியது. இதனால் கோழிக் கறியின் விலை ரூ. 30 க்கும் குறைவாகச் சரிந்தது. விற்பனை சரிவினால், கோழி பண்ணையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
நாமக்கல் பண்ணைகளில் மட்டும் சுமார் 1 கோடி முட்டைகள் தேங்கியுள்ளதாகப் பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர். முன்னதாக, கோழி பண்ணையாளர்கள் வர்த்தகச் சங்கம், தமிழக அரசு விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகி சுப்பிரமணி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வரும் என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப் படும் எனத் தெரிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.