விஷால் மனுவை நிராகரித்த அதிகாரி திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Saturday,December 09 2017]

ஆர்.கே.நகரில் போட்டியிட மனுதாக்கல் செய்த விஷாலின் மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி திடீரென மாற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகர் விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த தீபன், சுமதி ஆகிய இருவரும் தாங்கள் விஷாலை முன்மொழிந்து கையெழுத்திடவில்லை என்று தேர்தல் அதிகாரி முன்  வாக்குமூலம் கொடுத்ததால், விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி வேலுச்சாமி திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரவீன் நாயர் ஐஏஎஸ் என்பவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று திமுக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்திருந்த நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.