விண்வெளிக்கு செல்லும் கனவு சுற்றுலா? சாதனை குழுவில் இந்திய பெண்மணி!
Send us your feedback to audioarticles@vaarta.com
மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா போல அனுப்பும் திட்டத்தை உலகின் பல தனியார் நிறுவனங்கள் செயல்படுத்த கனவு கண்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக விர்ஜின் கேலடிக்கின் எனும் தனியார் நிறுவனம் 3 முறை சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்து, தற்போது அதன் உரிமையாளரும் விண்வெளிக்கு சுற்றுலா சென்று திரும்பி இருக்கிறார். இந்தக் குழுவில் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இந்தியப் பெண்மணி ஒருவர் இடம்பெற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெரும் பணக்காரரான ரிச்சர்ட் பிரான்சன் என்பவருக்கு சிறிய வயதில் இருந்தே ஸ்பேஸ் ஆராய்ச்சியின் மீது கொள்ளை பிரியமாம். தற்போது 70 வயதாகும் இவர் மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக நியூயார்க் பகுதியில் சொந்தமாக ஒரு ஸ்பேஸ் நிறுவனத்தையே ஆரம்பித்து விட்டார். விர்ஜின் கேலடிக்கின் எனும் பெயர்க்கொண்ட இந்த நிறுவனம் தானே விண்கலத்தை உருவாக்கி தற்போது விண்வெளிக்கு பயணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதேபோல விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் முயற்சியில் தற்போது அமேசான் நிறுவனமும் இணைந்து இருக்கிறது. இதற்காக அதன் செயல்தலைவர் ஜெஃப் பேஸோஸ் வரும் 20 ஆம் தேதி விண்வெளிக்கு பறக்க இருக்கிறார். இந்நிலையில் விர்ஜின் கேலடிக்கின் நிறுவன உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்சன் தனது கனவுத் திட்டத்தை தீவிரமாக்கி இருக்கிறார்.
இந்தக் கனவுத் திட்டத்தில் முக்கிய பகுதியாக நேற்று நியூமெக்சிகோவில் உள்ள பாலைவனப் பகுதியில் இருந்து மதர்ஷிப் எனும் ராக்கெட் மூலம் விஎஸ்எஸ் யூனிட்டி எனும் விண்கலம் விண்வெளிக்கு பறந்தது. இந்த விண்கலத்தில் விர்ஜின் கேலடிக்கின் நிறுவன உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்சன், கொலின், பென்னட் பெத், மோசஸ், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சிரிஷா பாண்ட்லா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இவர்களைத் தவிர இரண்டு விமான ஓட்டிகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்திய நேரப்படி சரியாக இரவு 8 மணிக்கு பறக்கத் துவங்கிய மதர்ஷிப் எனும் ராக்கெட் 50 கிலோ மீட்டர் தொலைவுவரை பறந்து பின்பு விஎஸ்எஸ் யூனிட்டி எனும் விண்கலம் வெற்றிக்கரமாகப் வானில் பிரித்துவிட்டது. அதையடுத்து அந்த விண்கலம் 80 கிலோமீட்டர் வரை பயணம் செய்து பின்பு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒன்றரை மணிநேரம் நிகழும் இந்த விண்வெளி சுற்றுலா பயணத்தைக் குறித்து விஞ்ஞானிகள் பலரும் மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.
இதனால் விஞ்ஞானிகள் மட்டுமே ஆராய்ச்சிக்காக விண்ணில் பறக்கும் காலம்போய் தற்போது சுற்றுலா பயணிகளும் விண்வெளிக்கு பறக்கும் புது கனவுத் திட்டத்தை ரிச்சர்ட் பிரான்சன் உண்மையாக்கி இருக்கிறார். மேலும் இந்தக் கனவுத் திட்டத்தில் பயணிக்க இதுவரை 400 க்கும் மேற்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகின் பெரும் பணக்காரர்கள் எனப் பலரும் விண்ணப்பித்து இருக்கும் நிலையில் ஒருமுறை விண்வெளி சுற்றுலா செல்வதற்கு இந்திய மதிப்பில் ரூ.90 லட்சம் செலவாகும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
It’s a beautiful day to go to space. We’ve arrived at @Spaceport_NM. Get ready to watch LIVE at 7:30 am PT | 10:30 am ET | 3:30 pm BST https://t.co/PcvGTmA661 #Unity22 pic.twitter.com/4KjGPpjz0M
— Richard Branson (@richardbranson) July 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com