ஒரே நேரத்தில் 6 இடங்களில் கடல் நீரை உறிஞ்சும் மேகம்!!! ஹாலிவுட்டையும் மிஞ்சும் அற்புதக்காட்சி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் மேகம் கடல் நீரை நேரடியாக உறிஞ்சுவதைப் போன்ற ஒரு புகைப்படத்தை தினத்தந்தி வெளியிட்டு இருக்கிறது. பார்ப்பதற்கு விசித்திரமாக இருக்கும் இந்தக் காட்சி ஹாலிவுட் படக்காட்சியை மிஞ்சும் அளவிற்கு பெரும் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் லூசியானா, மிச்சிகன், அலபாமா, மேற்கு புளோரிடா போன்ற மாகாணங்களில் தற்போது புயல் வலுத்து வருகிறது.
இந்நிலையில் லூசியானா மாகாணத்திலுள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இயற்கையின் அற்புதக்காட்சி ஒன்றை பார்த்து மிகவும் பிரமித்துப் போயிருக்கின்றனர். அதில் அருகருகே ஒரே நேரத்தில் 6 இடங்களில் மேகம் கடல் நீரை உறிஞ்சி எடுத்துக் கொள்வதைப் போல ஒரு அற்புதம் நிகழ்ந்து இருக்கிறது. முதலில் பார்த்து வியந்துபோன மீனவர்கள் அதைப் புகைப்படமாக எடுத்தும் வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments