பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 'இந்தியன் 2' படத்தின் நாயகி!

கமலஹாசன் நடிக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் நாயகிகளில் ஒருவரான ரகுல் ப்ரீத்திசிங் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி போலவே பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக நாகார்ஜுன்னா தொகுத்து வழங்குவதாக பாராட்டுக்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் பிக்பாஸ் தெலுங்கு வீட்டிற்குள் நடிகை ரகுல் ப்ரீத்திசிங் செல்ல உள்ளதாகவும், ஆனால் இவர் போட்டியாளராக இன்றி சிறப்பு விருந்தினராக செல்ல உள்ளதாகவும் தெரிகிறது. நாகார்ஜுன், ரகுல் பிரித்திசிங் இணைந்து நடித்த 'மன்மதடு 2' படத்தின் புரமோஷனுக்காக அவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாகவும் அவருடைய பிக்பாஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்ப வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது. மன்மதடு 2' படம் வரும் 9ஆம் தேதி வெளியாகவிருப்பதை அடுத்து இந்த புரமோஷன் நிகழ்ச்சிக்கு படக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே ரகுல் பிரீத் சிங் தான் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தின் நாயகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனுடன் நடிக்கவிருப்பதால் அவர் பிக்பாஸ் தமிழ் வீட்டிற்கும் சிறப்பு விருந்தினராக இந்த 100 நாட்களுக்குள் வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.