இணையத்தில் வைரலாகும் ரகுல் ப்ரீத்திசிங் லிப்கிஸ் வீடியோ
- IndiaGlitz, [Friday,August 09 2019]
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, ரகுல் ப்ரீத்திசிங் நடித்த 'மன்மதுடு 2' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் உள்ள ஒருசில காட்சிகளை சென்சார் அனுமதிக்காததால் அந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இந்த படத்தின் நாயகி ரகுல் ப்ரீத்திசிங், நடிகை ஜான்சிக்கு கொடுக்கும் லிப்கிஸ் முத்தம். ஆனால் இந்த காட்சி அமெரிக்கா உள்பட பல நாடுகளின் சென்சார் போர்டுகள் அனுமதித்துள்ளதால் இந்த காட்சிகளின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருசில நெட்டிசன்கள் இந்த காட்சியை குறிப்பிட்டு பாடகி சின்மயியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். பெண் உரிமை பற்றி அதிகம் பேசும் பாடகி சின்மயி இந்த காட்சியை எப்படி அனுமதித்தார்? ஒருவேளை இந்த காட்சி அவருடைய ஐடியாவா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த படத்தை இயக்கிய ராகுல் ரவீந்திரன் தான் சின்மயி கணவர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.