பப்ஜி விளையாடிய 6 கல்லூரி மாணவர்கள் கைது!

  • IndiaGlitz, [Friday,March 15 2019]

பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் அடிமையாவது மட்டுமின்றி மனதில் குற்றச்செயல்கள் செய்யும் அளவுக்கு மனநிலை பாதிக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து குஜராத் உள்பட ஒருசில மாநிலங்கள் இந்த விளையாட்டை தடை செய்துள்ளன.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் பப்ஜி ஆன்லைன் விளையாட்டை விளையாடிய கல்லூரி மாணவர்கள் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று ராஜ்கோட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் 18 முதல் 22 வயதுடைய கல்லூரி மாணவர்கள் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இளைஞர்கள், குழந்தைகள் மனதை அடிமைப்படுத்தும் இந்த விளையாட்டை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்றும், போலீசார்களின் அறிவுரையை ஏற்று இந்த விளையாட்டில் இருந்து இளையதலைமுறையினர் வெளியே வரவேண்டும் என்றும் மனநல மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.