தூத்துகுடி துப்பாக்கி சூடு: 15 கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினிகாந்த்!

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அந்த சம்பவத்தை விசாரணை செய்துவரும் விசாரணை ஆணையம் கேட்ட 15 கேள்விகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பதில் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததூ. அந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறுவதற்காக ரஜினிகாந்த் தூத்துகுடி சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதனை அடுத்து இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்துவரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் ரஜினிகாந்துக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியது. இரண்டு முறையும் அவர் ஆணையம் முன் நேரில் ஆஜராகவில்லை என்பதும் எழுத்துப்பூர்வமான கேள்விகளை கேட்டால் தானும் எழுத்துப்பூர்வமாக பதில் சொல்ல தயார் என்றும் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து கூறப்பட்டு இருந்தது

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்திடம் விசாரணை ஆணையம் 15 கேள்விகள் கேட்டதாகவும், அந்த 15 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக ரஜினிகாந்த் பதில் அளித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஜினிகாந்த் அளித்துள்ள பதில்கள் குறித்த தகவல், விசாரணை ஆணையம் அரசிடம் அறிக்கை அளிக்கும் போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.