பத்மபூஷன் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை
Send us your feedback to audioarticles@vaarta.com
'தல' என்று அன்புடன் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிக்கு பத்மவிருது அளிக்க வேண்டும் என பிசிசிஐ பரிந்துரை செய்த செய்தி குறித்து சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்மபூஷன் விருது அளிக்க வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
22 வயதான பிவி சிந்து ஏற்கனவே கேல்ரத்னா விருது, பத்ம ஸ்ரீ, அர்ஜூனா ஆகிய விருதுகளை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் முக்கிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதுக்கு பி.வி.சிந்து பெயரை இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
தல தோனி மற்றும் பி.வி.,சிந்துவுக்கு இந்த விருது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com