மக்கள் ஓட்டு யாருக்கு? அதிரடி காட்டும் ராயபுரம் தொகுதியின் கருத்துக் கணிப்பு!
- IndiaGlitz, [Friday,March 05 2021]
அதிமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பில் 6 முக்கிய வேட்பாளர் போட்டி இடுவதற்கான தொகுதிகள் எதுவென்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை மாவட்டம் ராயபுரம் சட்டப்பேரவை தொகுதியும் இடம் பிடித்து இருக்கிறது.
இத்தொகுதியில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக 7 ஆவது முறையாக களம் இறங்க இருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.மனோகரை தோற்கடித்து 8 ஆயிரத்து 31 வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஜெயக்குமார். தற்போது மீண்டும் அத்தொகுதியில் போட்டி இடுகிறார். இந்நிலையில் ராயபுரம் தொகுதியில் மக்களின் ஓட்டு யாருக்கு என்ற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
அந்தக் கருத்துக் கணிப்பில் மக்களின் பெரும்பாலான ஆதரவை பெற்று வரும் தேர்தலிலும் ஜெயக்குமார் வெற்றிப் பெறுவார் என்ற நம்பிக்கையான கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அமைச்சர் ஜெயக்குமாரை குறித்து மக்கள் தெரிவித்த கருத்துக்களும் அவருக்கு பக்க பலமாகவே அமைந்து இருக்கின்றன. இதனால் ராயபுரம் தொகுதிக்கான வெற்றியில் அதிமுக முன்னிலை வகிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.