மக்கள் ஓட்டு யாருக்கு? அதிரடி காட்டும் ராயபுரம் தொகுதியின் கருத்துக் கணிப்பு!

  • IndiaGlitz, [Friday,March 05 2021]

அதிமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பில் 6 முக்கிய வேட்பாளர் போட்டி இடுவதற்கான தொகுதிகள் எதுவென்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை மாவட்டம் ராயபுரம் சட்டப்பேரவை தொகுதியும் இடம் பிடித்து இருக்கிறது.

இத்தொகுதியில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக 7 ஆவது முறையாக களம் இறங்க இருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.மனோகரை தோற்கடித்து 8 ஆயிரத்து 31 வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஜெயக்குமார். தற்போது மீண்டும் அத்தொகுதியில் போட்டி இடுகிறார். இந்நிலையில் ராயபுரம் தொகுதியில் மக்களின் ஓட்டு யாருக்கு என்ற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அந்தக் கருத்துக் கணிப்பில் மக்களின் பெரும்பாலான ஆதரவை பெற்று வரும் தேர்தலிலும் ஜெயக்குமார் வெற்றிப் பெறுவார் என்ற நம்பிக்கையான கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அமைச்சர் ஜெயக்குமாரை குறித்து மக்கள் தெரிவித்த கருத்துக்களும் அவருக்கு பக்க பலமாகவே அமைந்து இருக்கின்றன. இதனால் ராயபுரம் தொகுதிக்கான வெற்றியில் அதிமுக முன்னிலை வகிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

More News

அதிமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.

மாலத்தீவுக்குப் பறந்த முன்னணி நடிகை… இத்தேர்வுக்கு அவர் கூறிய காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமானத்தில் பறப்பதை போல ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

வாக்கிங் சென்ற பெண்ணுக்கு 2 கோடி ஜாக்பாட்… அதுவும் ஒரு வாந்தியால் வந்த அதிர்ஷ்டம்?

அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமா என்று பலரும் கேட்டு இருப்பார்கள். ஆனால் இங்கு ஒரு பெண்ணிற்கு அதிர்ஷ்டம் கடலில் இருந்து கரை ஒதுங்கி இருக்கிறது.

'இறுதிச்சுற்று' படத்தில் நடித்தவரா இவர்? இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!

கடந்த 2016ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த 'இறுதிச்சுற்று'திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே 

பிக்பாஸ் கவின் நடித்த 'லிஃப்ட்' அட்டகாசமான மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகர் கவின் ஒப்பந்தமான திரைப்படம் 'லிஃப்ட்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே