அன்புச்செழியன் மீதான புகார் வாபஸ்: கந்துவட்டி வழக்கில் திடீர் திருப்பம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர், நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பைனான்சியர் அன்புச்செழியனை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருவது தெரிந்ததே. காவல்துறையினர்களின் தீவிர நடவடிக்கையால் அன்புச்செழியன் ஒருசில நாட்களில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அன்புச்செழியன் மீது கொடுத்த கந்துவட்டி புகாரை பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி.வி.குமார் வாபஸ் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர் இயக்கிய 'மாயவன்' திரைப்படத்திற்கு ரெட் விதிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த ரெட் விலக்கப்பட்டிருப்பதால் தன்னுடைய புகாரை சிவி.குமார் வாபஸ் பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து சி.வி.குமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
'திருக்குமரன் என்டர்டயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நான், அன்புச்செழியன் தரப்பு மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி புகார் ஒன்றை அளித்திருந்தேன். அதில், நான் தயாரித்து இயக்கியுள்ள 'மாயவன்' திரைப்படத்தை வெளியிட அன்புச்செல்வனுக்குச் சொந்தமான கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற்றுத்தர வேண்டும் என்றும் கோபுரம் பிலிம்ஸ் வசம் இருக்கும் என்னுடைய நிதி ஆவணங்களை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரியிருந்தேன். இந்நிலையில் நான் கேட்டவற்றை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் தற்போது ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து வழக்கை வாபஸ் பெற்றுள்ளேன். மாயவன் திரைப்படம் விரைவில் வெளியாகும்' என்று சிவி குமார் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments